உதட்டு முத்தம் அந்த ஹீரோவுக்கு மட்டும் தான் அனுமதி – தமன்னா..!


தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் தமன்னா. முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

பல நடிகர்களுடன்அவரது பெயர் கிசுகிசுக்கப்பட்டாலும், நல்ல இளைஞனை அதுவும் குறிப்பாக, தமிழ் இளைஞரை திருமணம் செய்ய விரும்புவதாக, தமன்னா கூறியிருந்தார்.

இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில், தமன்னா பங்கேற்று பேசியுள்ளார். அப்போது, ”சினிமாவில் நடிக்கும்போது, முத்தக்காட்சிகளில் நடிக்க நான் ஒப்புக் கொள்வதில்லை. நடிப்பிற்காக, முத்தம் தரவும் நான் சம்மதிப்பதில்லை.

இந்த விசயத்தை, எனது சினிமா ஒப்பந்தத்திலேயே நான் குறிப்பிட்டும் வருகிறேன். இதுபற்றி என் தோழிகள் பலரும் என்னை கிண்டல் செய்வது வழக்கம். ஆனால், எனக்கு, எல்லோருடனும் முத்தக்காட்சிகளில் நடிக்க விருப்பமில்லை.

ஆனால், ஹிருத்திக் ரோஷன் மாதிரி ஒரு ஆள் கூட நடிக்க நேர்ந்தால், கண்டிப்பாக முத்தம் தர தடை போட மாட்டேன். ஹிருத்திக் ரோஷனை சமீபத்தில் நான் சந்தித்தேன். அவரிடம் என்ன பேசுவது என்று நான் மெய்மறந்து நின்றிருந்தேன். ஆனால், அவரே முன்வந்து என்கூட புகைப்படம் எடுக்க விருப்பம் தெரிவித்தார்.

அந்த சம்பவம் எனக்கு இப்பவும் வியப்பாக உள்ளது. என் மனநிலையை புரிந்துகொண்டதோடு, பக்குவமாக நடந்துகொண்ட ஹிருத்திக் ரோஷனை முத்தம் கொடுத்து பாராட்ட வேண்டும். அவருடன் சினிமாவில் இணைந்து நடித்தால், இந்த ஆசை நிறைவேறும் என நினைக்கிறேன்,” என்று தமன்னா தெரிவித்துள்ளார்.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!