இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி காலமானார்..!


எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பலருடன் நடித்த பெருமைக்குரிய நடிகை சீதாலட்சுமி இன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

தற்போது தமிழ் திரையுலகில் பிரபலமான நடன இயக்குனராக வலம் வரும் ராதிகா அவர்களின் தாயார் சீதாலட்சுமி. இவர் இன்று (28/02/2019) மாலை 6 மணியளவில் காலமானார். இவருக்கு வயது 87. கடந்த சில தினங்களாக இவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பலருடன் நடித்த பெருமைக்குரியவர் நடிகை சீதா லட்சுமி. எங்கவீட்டு பிள்ளை, அன்னமிட்டகை, ஆண்டவன் கட்டளை உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் நம்பியாரின் சகோதரியாக நடித்தவர்தான் சீதாலட்சுமி.

பர்மாவில் பிறந்த சீதாலட்சுமி தமிழகத்தில் வளர்ந்தவர். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் பங்கு கொண்டவர் என்பது ஆச்சரியப்படக் கூடிய ஒரு விஷயம். மேலும் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் நாடகங்களிலும் பங்கேற்று நடித்துள்ளார். திரையுலகில் இவரது சாதனைகளுக்காக கலைமாமணி, கலைச்செல்வி என்கிற பல பட்டங்களை புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் கரங்களால் பெற்றவர். தந்தை பெரியார் விருது பெற்றிருக்கிறார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!