பாகிஸ்தானை அழிக்க ‘மிராஜ்-2000’ விமானங்களை தேர்வு செய்தது ஏன்?


பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்களை அழிப்பதற்கு மிராஜ்-2000 விமானங்களை தேர்வு செய்தது ஏன் என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் தொடர்ந்து வாலாட்டிக்கொண்டிருந்த பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்களை நிர்மூலம் ஆக்குவதற்கு 12 ‘மிராஜ்-2000’ விமானங்கள பயன்படுத்தப்பட்டன.

இதன் பின்னணி குறித்து தெரிய வந்துள்ளது.

இந்த விமானங்கள் அதிநவீன வசதிகளைக் கொண்ட நான்காம் தலைமுறை விமானம்.

ரபேல் போர் விமானங்களை தயாரித்து வழங்குகிற பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்தின் தயாரிப்புதான், இந்த மிராஜ்-2000 விமானங்களும். இந்தியாவிடம் இந்த விமானங்களின் 3 அணிகள் உள்ளன. அவற்றில் சுமார் 50 விமானங்கள் உள்ளன.

இவை ஒற்றை என்ஜினை கொண்டவை. இந்த விமானங்கள் அதி நவீனமானவை.


இவற்றில் இருந்து ஏவுகணைகளை ஏவ முடியும். லேசர் வழிகாட்டும் குண்டுகளையும் போட முடியும்.

இவை, தாக்குதல் இலக்கை மிகத்துல்லியமாக சென்று நிர்மூலம் ஆக்கும் வல்லமை படைத்தவை ஆகும். ஏனென்றால், இந்த விமானங்களில் ‘தேல்ஸ் ஆர்.டி.ஒய். 2’ ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவைதான் 100 சதவீதம் துல்லியமான தாக்குதலுக்கு வழிநடத்தக்கூடியவை. மேலும் நீண்ட தூர இலக்கை குறிவைப்பதிலும் இந்த ‘மிராஜ்-2000’ விமானங்கள் நிபுணத்துவம் பெற்றவை.

எனவே தான் பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்த விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த விமானங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. ரூ.20 ஆயிரம் கோடியில் தர மேம்பாடு செய்யப்பட்டுள்ளன.

1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில்தான் இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் பறந்து சென்று தாக்குதல் நடத்தின.

இப்போது 48 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய விமானங்கள் பாகிஸ்தானுக்குள் எல்லை தாண்டிச்சென்று தாக்குதல் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!