அமேசான் காட்டுப்பகுதியில் கரையொதுங்கிய திமிங்கிலம் – அதிர்ச்சியில் உறைந்த பிரேசில் மக்கள்..!


அமேசான் நதி பாயும் அமேசான் காட்டுப்பகுதியில் திமிங்கிலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இதனால் பிரேசிலைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலர்கள் பலரும் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகியுள்ளனர். அனைவரது சந்தேகமும் எப்படிக் கடலில் வாழும் திமிங்கிலம் இங்கு வந்தது என்பதுதான்.

சுமார் 11 மீட்டர் நீளத்தில் இருக்கும் `humpback’ இன திமிங்கிலம் அருகில் இருக்கும் ஆராருன்னா பீச்சிலிருந்து கொஞ்சம் தள்ளியே இருந்திருக்கிறது. இதைச் சுற்றிப் பறந்த பருந்துகளை வைத்தே அங்கு இது கண்டுபிடிக்கப்பட்டது. 10 டன் எடை கொண்ட இது தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு, திசைமாறி புயலில் இங்கு அடித்துவரப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இருப்பினும் பிப்ரவரி மாதத்தில் பிரேசில் பக்கத்தில் இவை வழக்கமாக வரவில்லை. இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் விடையில்லாமலேயே இருக்கிறது. இப்போது திமிங்கிலங்கள் கரை ஒதுங்குவது உலகமெங்கும் வழக்கமான நிகழ்வாகிவிட்டது. ஆனால், அதைப்போன்ற நிகழ்வா, இல்லையா என்பதே இப்போதும் மர்மமாகவே இருக்கிறது.

பெரிய ‘humpback’ திமிங்கிலத்தில் பாதியே இருக்கும் இந்தக் குட்டி திமிங்கிலத்தை, அங்கிருந்து நகர்த்துவதே பெரும் வேலையாக இருந்தது அங்கே இருந்த வனத்துறைக்கு. இதற்கு அது இறந்து கிடந்த இடமும் காரணம். இது எப்படி மடிந்தது என்ற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த முடிவுகள் தெரிய இன்னும் 10 நாள்கள் ஆகும் எனவும் அப்போதுதான் இந்த மர்மம் நீங்கும் என்றும் அங்கிருக்கும் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இப்போது திமிங்கிலங்கள் கரை ஒதுங்குவது உலகமெங்கும் வழக்கமான நிகழ்வாகிவிட்டது.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!