யார் காதில் விழ வேண்டுமோ.. பேசாம இருக்கிறாங்க.. 7 பேர் விடுதலை பற்றி விஜய் சேதுபதி..!


பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் முடிவெடுக்க வேண்டியவர்கள் முடிவெடுக்க வேண்டும் நடிகர் விஜய் சேதுபதி வலியுறுத்தியுள்ளார்.

இயக்குனர் செழியன் இயக்கத்தில் வெளியாகி உள்ள டூலெட் திரைப்பதின் சிறப்பு காட்சியை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள போர் பிரன்ஸ் அரங்கில் பார்த்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தார் விஜய் சேதுபதி. அப்போது அவர் பேசியதாவது,

நடுத்தர மக்களின் வாழ்க்கையை டுலெட் படம் பிடித்துக் காட்டுகிறது.

ஐடி நிறுவனங்கள் பெரிதாக வந்து கொண்டிருக்கின்ற சூழலில் உயர்த்தப்பட்ட வாடகை இன்று வரை வரை அப்படியே இருக்கிறது. இந்த வாடகை சூழலை சமாளிக்க முடியாமல் சென்னையில் பூர்வகுடிகள் சென்னையை விட்டு வெளியேறக் கூடிய அவல நிலையை இந்த திரைப்படம் சுட்டிக்காட்டியிருக்கிறது.


சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற கனவோடு இருக்கிற நடுத்தர வர்க்கத்தினரை இத்திரைப்படம் தொடர்புபடுத்தும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலளித்தார்.

இதுதொடர்பாக பேசுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. யார் காதில் விழ வேண்டுமோ அவர்கள் காதில் விழுந்து நல்லது நடக்க வேண்டும். ஏக்கமும் வருத்தமும் மட்டுமே இருக்கிறது என்னை விட பெரியவர்கள் இதை பற்றி பேசி இருக்கிறார்கள். எதுவும் நடக்கவில்லையே?

இவ்வாறு விஜய் சேதுபதில் ஆதங்கத்துடன் பேசினார்.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!