தாம்பத்திய உறவை மேம்பட வைக்கும் பொடி..! எப்படி வீட்டிலே தயாரிக்கலாம்?…


கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும்.

கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.


கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள், ரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.


தாம்பத்திய உறவு மேம்பட
கற்றாழையின் சதைப்பகுதி உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். அதைவிட வேர்ப்பகுதியில் மிக அதிக அளவிலான மருத்துவ குணங்கள் உள்ளன. ஆண்களுக்கு விருத்தியை உண்டாக்கும் வலிமைமிக்க குணம் கற்றாழையின் வேர்களில் உண்டு.

அதற்காக கற்றாழையின் வேரை அப்படியே சாப்பிட முடியாது. அதற்கு சில வழிமுறைகள் உண்டு.


கற்றாழையின் வேர்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் இட்லி பாத்திரத்தில் அரை லிட்டர் அளவுக்கு பால் விட்டு, இட்லி தட்டின் மேல் சுத்தம் செய்து வைத்திருக்கும் கற்றாழை வேர்களை வைத்து, அதை ஆவியில் வேகவைக்க வேண்டும்.

பின்பு அதை எடுத்து நன்கு காயவைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு பாலில் கலந்து குடித்து வந்தால், ஆண்மைக்குறைவு என்ற பிரச்னையே இருக்காது. வீரியம் அதிகரிக்கும். ஆரோக்கியமான விந்தணுக்கள் பெருகும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!