மார்ச் மாதம் திருமணம்… வெடிகுண்டைச் செயல் இழக்க வைத்த காஷ்மீர் மேஜர் பலி..!


காஷ்மீரில் சோரி நவ்சேரா பகுதியில் நேற்று மாலை 3 மணியளவில் கண்ணி வெடிகுண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாக், தீவிரவாதிகளால் சர்வதேச எல்லைக் கோட்டைத் தாண்டி, 1.5 கிலோ மீட்டர் இந்திய எல்லைக்குள் இந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றைச் செயல் இழக்க வைக்கும் முயற்சியில் இன்ஜீனியரிங் பிரிவைச் சேர்ந்த ராணுவ மேஜர் சித்ரேஷ் சிங் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு வெடிகுண்டைச் செயல் இழக்க வைத்த அவர் , மற்றொன்றைச் செயல் இழக்க வைக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாகக் குண்டு வெடித்தது. இதில், சம்பவ இடத்திலேயே சித்ரேஷ் சிங் உடல் சிதறி பலியானார். மற்றோரு வீரர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.‘உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த சித்ரேஷ் சிங், 31 வயதே நிரம்பியவர். அவருக்கு மார்ச் மாதம் திருமணம் நடைபெற இருந்தது. மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

புல்வாமா தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் காஷ்மீர் மாணவ- மாணவிகளிடம் பிற மக்கள் கோபத்தைக் காட்டி வருகின்றனர். சிலர், அவர்களை மனதளவில் துன்புறுத்துகின்றனர். இதனால், காஷ்மீருக்கு வெளியே பல மாநிலங்களில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகள் அறைகளுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதையடுத்து, சி.ஆர்.பி. எஃப் அமைப்பு அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் தங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் உடனடியாக இந்த ஹெல்ப்லைன் எண்ணைத் தொடர்பு கொள்ளவும். அல்லது குறுஞ்செய்தி அனுப்பவும் என்று சி.ஆர்.பி.எஃப் ட்விட் செய்துள்ளது.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!