வாழ்க்கையை புரட்டி போடும் முடிவெடுத்த சிம்பு – உடனடியாக அமெரிக்கா பயணம்!

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இருந்தாலும் வசூல் திருப்திகரமாக இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் தோல்வி அடைந்து விட்டதாக இணையத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர். இதுகுறித்து அவரது நட்பு வட்டாரத்தில் கேட்ட போது, அவர்கள் சிம்புவின் ஓவர் வெயிட் தான் காரணம் என்று கூறியுள்ளனர்.

இதனை சமீபத்தில் தான் சிம்புவும் உணர்ந்துள்ளார். இதன் காரணமாக அதிரடியாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு சுமார் 50 நாட்கள் தங்க முடிவு செய்துள்ளார். வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னை திரும்புகிறார்.

அமெரிக்காவில் தனது எடையை பாதியாக குறைக்கப் போகிறாராம். எனவே அமெரிக்காவில் உடற்பயிற்சி நிபுணர், ஊட்டச்சத்து நிபுணர் ஆகியோரின் உதவியுடன் முழு நேரம் பயிற்சியில் சிம்பு ஈடுபடுவார் என்று தெரிகிறது.- Source: samayam


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.