ஏழை மக்களுக்காக 4 லட்சம் வீடுகள் ஒரே நாளில் கிரகபிரவேசம்! – ஆந்திர முதல்வரின் அசத்தல்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தன் மாநில மக்களுக்கு அவ்வப்போது பல்வேறு நலத் திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்.

சமீபத்தில் மூன்று சக்கர வாகனத்துக்கான ஆயுள் கால வரியை ரத்து செய்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது ஆந்திராவில் உள்ள ஏழை மக்களுக்கு மானிய விலையில் வீடுக் கட்டி கொடுத்து அசத்தியுள்ளார். ஆந்திராவில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு என்.டிஆர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மானிய விலையில் வீடுகள் கட்டித்தரப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தை பொறுத்தவரை மக்கள் ரூ 80,000 மட்டும் செலுத்தினால் போதும் மீதமுள்ள தொகையை அரசே செலுத்தி அவர்களுக்கு வீடு கட்டி தரும். இந்த திட்டத்தின் கீழ் கிராம புறங்களில் சுமார் மூன்று லட்சம் வீடுகளும் நகர்ப் புறங்களில் ஒரு லட்சம் வீடுகளும் கட்டப்பட்டது.

அனைத்து கட்ட பணிகளும் முடிவடைந்த நிலையில் இந்த நான்கு லட்சம் வீடுகளுக்கும் நேற்று ஒரே நாளில் கிரகபிரவேசம் நடைபெற்றது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் கட்டப்பட்ட வீடுகளை முதல் சந்திரபாபு நாயுடு திறந்துவைத்து வீட்டுக்கான சாவிகளை மக்களிடம் வழங்கினார்.

2017-ம் ஆண்டு ஆந்திராவில் ஒரு லட்சம் வீடுகளும் 2018-ம் ஆண்டு மூன்று லட்சம் வீடுகள் திறக்கப்பட்டன. சுமார் 356 கோடி ரூபாய் செலவில் இந்த வருடம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தெலுங்கு தேசம் கட்சியின் நான்கு ஆண்டு கால ஆட்சியில் இதுவரை 11 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. – Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.