‘காதலர் தினத்தன்று அதை சொல்லபோறோம்’ – பிரஜின், சாண்ட்ரா ஜோடி சர்ப்ரைஸ்

சேட்டிலைட் சேனல் அறிமுகமான காலத்தில் மக்களிடம் பிரபலமாகத் தொடங்கியவர்கள் சாண்ட்ரா மற்றும் பிரஜின். மலையாளத்தில் ஆங்கராக இருந்த சாண்ட்ராவுக்கு, தமிழில் அதிகப்படியான ரசிகைகளைக் கொண்ட பிரஜின் மீது காதல். தம்பதியினராக, மண வாழ்க்கையில் இணைந்தார்கள்.

திருமணத்துக்குப் பிறகு இருவருமே சினிமாவுக்கு முயற்சி செய்தனர். சில படங்களில் நடித்தனர். தற்போது வரை இருவரின் சினிமா பயண முயற்சி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இதனிடையே சென்ற ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டிவி பக்கம் வந்தார் பிரஜின். விஜய் டிவி சீரியல் ஹீரோவாக அவர் ரீ எண்ட்ரி தந்த ‘சின்னத்தம்பி’ தொடருக்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட சீரியல்களில் சின்னத்தம்பியும் ஒன்று. இது பிரஜினுக்கு நிறைய விருதுகளைப் பெற்றுத் தந்தது தொடர்.

‘’வரப்போற பிப்ரவரி 14 எங்களுக்கு மிக மிக முக்கியமான, அதாவது ஸ்பெஷலான லவ்வர்ஸ் டே சார். அந்த நாளில் எங்க ரெண்டு பேரின் ரசிகர்களுக்கும் ஒரு சந்தோஷமான செய்தி தரப்போறோம். எங்க வாழ்வின் மிக முக்கியமான தருணம் அது’’ என சர்ப்ரைஸ் வைக்கிறார்.

‘சந்தோஷ சர்ப்ரைஸ்’ என்றால், நாம் முந்தித் தர வேண்டாமா?

யெஸ், ’பிரஜின் – சாண்ட்ராவுக்கு புரமோஷன் கிடைத்திருக்கிறது’ என்பதே அந்த சர்ப்ரைஸ்

ஆமாங்க, அடுத்த சில நாட்களில் இருவரும் அப்பா அம்மா ஆகிறார்கள்! – Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.