ஆண் குழந்தைக்கு அப்பாவானாா் சென்றாயன்… மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் அறிமுகமானவர் நடிகர் சென்றாயன். தொடர்ந்து ‘சிலம்பாட்டம்’ , ’ஆடுகளம்’, ‘மூடர்கூடம் என பல படங்களில் நடித்தார். ‘ஜீவா’ நடித்த ‘ரௌத்ரம்’ படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருப்பார். பிக் பாஸ் சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றவர்.

இவர் கயல்விழி என்பவரைக் காதலிக்க, இருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

பிக் பாஸ் சீசனின் போது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றாயன் இருந்த போதுதான் கயல்விழி கர்ப்பமடைந்திருக்கிற செய்தி வெளியில் தெரிந்தது.

உடனே, சிநேகாவின் ரசிகையான தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக கர்ப்பமாக இருந்த கயல்விழியை சிநேகாவின் வீட்டுக்கே அழைத்துச் சென்று சந்திக்க வைத்து சர்ப்ரைஸ் பரிசளித்தார்.

தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் சீமந்தம் நடந்து பெற்றோர் வீட்டுக்குச் சென்ற கயல்விழி, இன்று மாலை 3 30 மணியளவில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள். – Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.