கொடூரமாக கொல்லப்பட்ட சந்தியா பற்றி வெளிவராத அதிர்ச்சி உண்மைகள்..!


சென்னையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சந்தியா, பாலகிருஷ்ணன் குறித்து தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. அவர்களின் கடந்த கால வாழ்க்கையில் பல கசப்பான சம்பவங்கள் நடந்ததாக சந்தியா, பாலகிருஷ்ணனுடன் பழகியவர்கள் நம்மிடம் கூறினர்.

“குமரி மாவட்டம், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி அருகில் உள்ள தெரிசனங்கோப்பு, ஞாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியா. குடும்ப வறுமையின் காரணமாகப் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தினார். இவருக்கு ஒரு சகோதரரும் ஒரு சகோதரியும் உள்ளனர். அவரின் அப்பா டீக்கடை நடத்திவருகிறார். அம்மா பிரசன்ன குமாரி, குடும்பத் தலைவி.

கிராமத்தில் எல்லோருடனும் சகஜமாகப் பேசிப் பழகும் சந்தியா, அழகாகவும் இருப்பார். ஒருபக்கம் வறுமை வாட்டினாலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு சிறுவயது முதல் இருந்தது. அதற்கான வாய்ப்புத் தேடிய சமயத்தில்தான் அவரின் போட்டோவை பாலகிருஷ்ணன் பார்த்துள்ளார். அப்போது சந்தியாவுக்கு 15 வயது. அதன் பிறகு சந்தியாவை பாலகிருஷ்ணன் காதலித்துள்ளார்.

பெற்றோர் சம்மதத்துடன் 13.11.2000-ம் ஆண்டில் சந்தியாவுக்கு 18 வயதுகூட பூர்த்தியடையாத சூழலில் அவரை பாலகிருஷ்ணன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு கணவனும் மனைவியும் தூத்துக்குடி டூவிபுரம், 5வது தெருவில் உள்ள சொந்த வீட்டின் மாடியில் குடியிருந்தனர்.


15 வயதுக்கு மேல் வித்தியாசம் என்றாலும் இவர்களின் இல்லற வாழ்க்கை ஆரம்பத்தில் இனிமையாகச் சென்றது. டூவிபுரத்தில் உள்ளவர்களிடம் சந்தியா சகஜமாகப் பேசினார். அப்போதுதான் தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் மாவட்டச் செயலாளராகப் பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

பள்ளியில் படிக்கும்போதே சினிமாவின் மீது பைத்தியமாக இருந்தவர் பாலகிருஷ்ணன். இதனால் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு இருந்தார். அவரின் அப்பா, அரசு ஊழியர் என்பதால் சொந்தமாக சில வீடுகள் இருந்தன. அதை வாடகைக்கும் விட்டிருந்தனர். இதனால் பாலகிருஷ்ணன் வேலைக்குச் சென்றுதான் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இதற்குள் இரண்டு குழந்தைக்குத் தாயாகிவிட்டார் சந்தியா.

இந்தச் சூழ்நிலையில்தான் வார்டு கவுன்சிலர் தேர்தலில் சந்தியாவை நிறுத்தினார் பாலகிருஷ்ணன். அப்போதுதான் சந்தியாவின் வாழ்க்கை திசைமாறியது. தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் சந்தியாவுக்கு தூத்துக்குடியில் நண்பர்கள் அதிகமாகினர். அவர்களுடன் செல்போனில் நீண்ட நேரம் பேசத் தொடங்கியிருக்கிறார். இது, கணவன் மனைவிக்கு இடையே பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

கணவர் வீட்டில் நடந்த சில கசப்பான சம்பவங்களால் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார் சந்தியா. அவரை சமாதானப்படுத்தி தூத்துக்குடிக்கு அழைத்துவருவது வாடிக்கையானது. இந்தச் சூழ்நிலையில்தான் பாலகிருஷ்ணன், `காதல் இலவசம்’ என்ற படத்தை சந்தியா கிரியேஷன்ஸில் தயாரித்து இயக்கினார். அந்தப் படம் வெற்றி பெறவில்லை. அதோடு நிதிநெருக்கடியில் பாலகிருஷ்ணன் தவித்துள்ளார்.

கடன் சுமை, குடும்ப பிரச்னை காரணமாக பாலகிருஷ்ணன் சென்னையிலேயே செட்டிலாகிவிட்டார். குழந்தைகளைப் பார்க்க தூத்துக்குடிக்கு வருவார். இதற்கிடையில் அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு சென்னைக்குச் சென்ற பாலகிருஷ்ணன், சினிமா இயக்கத்திலேயே ஆர்வம் காட்டிவந்துள்ளார். சினிமா வாய்ப்புகளும் எதிர்பார்த்தபடி வரவில்லை.


சென்னை ஜாபர்கான்பேட்டை, பாரிநகர், காந்தி தெருவில் வாடகைக்கு கடந்த ஓராண்டாகக் குடியிருந்தார். பாலகிருஷ்ணன் சென்னைக்கு வந்த பிறகு சில மாதங்கள் சென்னை, நாகர்கோவில் எனக் குடியிருந்துவந்தார் சந்தியா.

பாலகிருஷ்ணனின் கொடுமையைத் தாங்க முடியவில்லை எனக் கூறி கதறிய சந்தியா, சில மாதங்களுக்கு முன் விவாகரத்து கேட்க முடிவு செய்து பாலகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இவர்கள் இருவரின் விவகாரமும் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்தபோது கவுன்சலிங் அளிக்கப்பட்டுள்ளது.

பாலகிருஷ்ணனை விட்டு விலகிய சந்தியா, சென்னையில் உள்ள மகளிர் விடுதியில் தனியாகத் தங்கியிருந்து சினிமா வாய்ப்புகளைத் தேடிவந்தார்.

சந்தியாவின் நட்பு வட்டாரத்தைத் தவறாகப் பாலகிருஷ்ணன் எண்ணியதே அவர்களின் வாழ்க்கையில் விரிசல் ஏற்படக் காரணமானது. சந்தியா எப்போதும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அதோடு விதவிதமாக டிரஸ்களை அணிவார்.

சினிமா துறையிலிருக்கும் பாலகிருஷ்ணனுக்கு அது ஏன் பிடிக்கவில்லை. சின்னச் சின்ன விரிசல், பூதாகரமாக வெடித்து சந்தியாவைக் கொலை செய்யும் அளவுக்கு சென்றுள்ளது. சந்தியாவைக் கொலை செய்த வழக்கில் பாலகிருஷ்ணனை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி பார்சலாகக் கட்டி அடையாற்றிலும் குப்பைத் தொட்டிகளிலும் பாலகிருஷ்ணன் வீசியதாகப் போலீஸார் கூறுகின்றனர். அந்தளவுக்குக் கொடூர மனம் படைத்த பாலகிருஷ்ணனை நாங்கள் பார்த்ததில்லை. சந்தியாவுக்கு இப்படியொரு நிலைமை ஏற்படும் என்று நாங்கள் கனவில்கூட நினைக்கவில்லை’’ என்றனர்.

சந்தியாவின் செல்போன் குறித்து பாலகிருஷ்ணனிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். அந்த செல்போனில் சந்தியா கொலை செய்யப்படுவதற்கு முன் நடந்த சம்பவங்கள் குறித்த தடயங்கள் இருப்பதாகப் போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையில் பாலகிருஷ்ணனின் செல்போனை ஆய்வு செய்த போலீஸார் அதிலிருந்தும் சில முக்கிய தகவல்களைச் சேகரித்துள்ளனர். சந்தியாவின் செல்போன் நம்பரைக் கொண்டு அவர் யார், யாருடன் பேசினார் என்ற விவரங்களைச் சேகரித்துள்ளனர்.

தூத்துக்குடியில் சந்தியா வாழ்ந்த காலகட்டங்களில் அவருடன் நண்பர்களாக இருந்தவர்கள் குறித்த பட்டியலும் போலீஸாரிடம் உள்ளது. அதில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் தொடங்கி அரசியல் பிரமுகர்கள் வரை உள்ளனர். தூத்துக்குடி மத்திய போலீஸ் நிலையத்தில் சந்தியா விவகாரம் பஞ்சாயத்தில் முடிந்த கதையும் இருக்கிறது. சந்தியாவின் நண்பரான மெக்கானிக் ஷாப் ஓனரை போலீஸார் கவனித்த சம்பவம் இன்னமும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அதோடு திராவிடக் கட்சியைச் சேர்ந்த சுள்ளான், புல்லட் பாண்டி என்ற அடைமொழிகளோடு அழைக்கப்படும் இளைஞர் ஒருவருடன் சந்தியாவுக்கு நட்பு இருந்துள்ளது.


சந்தியாவைக் கொலை செய்த பிறகு, அன்றைய இரவு அதே வீட்டில் இருந்துள்ளார் பாலகிருஷ்ணன். அதாவது சந்தியாவின் சடலத்தோடு தங்கியிருந்துள்ளார் பாலகிருஷ்ணன். சந்தியாவின் உடலைத் துண்டு துண்டாக வெட்டுவதற்கு முன் பாலகிருஷ்ணனின் போனில் இருந்து சில அழைப்புகள் சென்றதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் யார் யார் என்பதை போலீஸார் ரகசியமாக விசாரித்துவருகின்றனர்.

இதனிடையே, சந்தியாவின் தலை, இடுப்புக்கு மேல் உள்ள பகுதிகளைப் பெருங்குடி குப்பை கிடங்கில் 2வது நாளாக இன்றும் 6 ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு துப்பரவுப் பணியாளர்களுடன் போலீஸார் தேடிவருகின்றனர். சந்தியாவின் தலை விவகாரம் பள்ளிக்கரணை போலீஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. டன் கணக்கில் கொட்டப்பட்ட குப்பையில் சந்தியாவின் தலையைக் கண்டறிவது என்பது சாதாரண விஷயமல்ல. சந்தியாவின் தலை மற்றும் இதர உடல் பாகங்கள் கிடைத்த பிறகுதான் தனிப்படை போலீஸார் நிம்மதி பெருமூச்சுவிட முடியும்.

விழாவுக்கு வந்தவங்க அத்தனை பேரையும் பேச்சு சுவாரஸ்யத்திலேயும், ஒருத்தரை கவனிக்கும்போது இன்னொருத்தரை மிஸ் பண்ணிடக் கூடாது அப்படிங்கிறதுலேயும் ரஜினி ரொம்ப பதற்றமா இருந்தார். லதா ரஜினியோ, ‘கண்டிப்பா சாப்பிட்டுட்டுதான் போகணும்’னு அன்பு வேண்டுகோள் வச்சிக்கிட்டிருந்தாங்க. அவங்ககிட்ட எப்பவுமே, தான் ஒரு ஸ்டாரோட மனைவிங்கிற தோரணை இருக்காது.

அதுவும் இன்னிக்கு, மணமகளுக்கு அம்மாவாக எங்களை மாதிரி விருந்தினர்களை எல்லாம் டைனிங் டேபிள் வரைக்கும் அழைச்சுக்கிட்டு போய் கவனிச்சது மனசுக்கு நிறைவா இருந்துச்சு. ரிட்டர்ன் கிஃப்ட்டில் வேப்ப விதை அடங்கின உருண்டை கொடுத்திருந்தாங்க” என்றவர், நாளை நடக்க இருக்கிற செளந்தர்யாவின் திருமணம் குறித்தும் பேசினார்.

”’நாளைக்கு, வீட்டிலேயே ராதா கல்யாண வைபவம் நடக்க இருக்குது. ஞாயிற்றுக்கிழமை இருபக்கத்து நெருக்கமான சொந்தக்காரங்களை மட்டும் அழைச்சு, வீட்டிலேயே எளிமையா திருமணம் பண்ணப்போறாங்க. அப்புறம், ரிசப்ஷன் திங்கள்கிழமை காலையில லீலா பேலஸில் நடக்க இருக்குது. என்னைப் பொறுத்தவரை, இன்னிக்கு செளந்தர்யாவும் விசாகனும் எப்படி சந்தோஷமா சிரிச்சுக்கிட்டு தம்பதி சமேதரராக நின்னாங்களோ, அதேமாதிரி அவங்களோட வாழ்நாள் முழுக்க சந்தோஷமா இருக்கணும்” என்று மனம் நிறைந்து பேசி முடித்தார் ஜெயந்தி கண்ணப்பன்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!