இந்திய கோடீஸ்வரரின் விநோத ஆசை – தலைப்பாகை கலருக்கு மேட்ச்சாக ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்!


லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரூபன் சிங், என்பவர்தான் இவ்வாறு பிரபலமான நபர். தொழிலதிபரான இவர், ஒவ்வொரு நாளும் தனது டர்பனின் நிறத்துக்கு ஏற்றவாறு ரோல்ஸ்ராய்ஸ் காரில் பயணம் மேற்கொள்வார்.

இதுதொடர்பாக, இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. ஆடம்பரக் கார்கள் மீது பிரியம் கொண்ட ரூபன் சிங், ஏராளனமான சொகுசு கார்களை வைத்திருக்கிறார்.

அதிலும் குறிப்பாக ரோல்ஸ்ராய்ஸ் வகை கார்கள் மீது அவர் உயிரையே வைத்துள்ளார். இதனால், வாரத்தின் 7 நாட்களிலும் 7 விதமான நிறங்களைக் கொண்ட ரோல்ஸ்ராய்ஸ் காரைப் பயன்படுத்தி வருகிறார்.

லண்டனில் நிதி நிறுவனத்தை நடத்தி வரும் ரூபன் சிங்கிற்கு, கடந்த 2000-ம் ஆண்டு சுமார் 738 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக ‘த சன்டே டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இதனால், இவரை பலரும் ‘பிரிட்டிஷ் பில்கேட்ஸ்’ என அழைக்க தொடங்கியுள்ளனர். இவருடையே பொழுதுபோக்கே விதவிதமான சொகுசு கார்கள் வாங்குவது தான். அண்மையில் கூட 50 கோடி ரூபாய்க்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி குவித்துள்ளார்.

ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை ஏழு கோடி ருபாய் முதல் பத்து கோடி ரூபாய் வரை இருக்கும். ஆனால் இவர் தனது தலைப்பாகை கலருக்கு ஏற்ற வகையில் இந்த கார்களை வாங்கி குவித்து வருகிறார்.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!