இளம்பெண்களின் மார்பில் சூடானை கல்லை தேய்த்து.. வேகமாக பரவும் ஆப்பிரிக்க கொடூரம்!


இளம் பெண்களின் மார்பகங்களில் சூடான கல்லை வைத்து தேய்க்கும் கொடூர பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகிலேயே மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்று ஆப்பிரிக்கா. ஆண்கள் இளம் பெண்களின் மார்பகங்களை பார்த்து விடக்கூடாது என்பதற்காகவும், இளம் பெண்களின் பாலியல் பலாத்காரங்களை தடுப்பதற்காகவும் சூடான கல்லை வைத்து தேய்க்கும் பழக்கம் அன்றிலிருந்து இன்றுவரை உள்ளது.

சூடான கற்கள் அல்லது இரும்பு பொருட்களை சிறுமிகளின் மார்பகங்களில் சூடு பறக்கும் அளவுக்கு தேய்ப்பார்கள்.

இப்படி தேய்ப்பது யார் என்று பார்த்தால், சிறுமிகளின் வீட்டில் உள்ள அம்மா, பாட்டி, போன்றவர்கள்தான். தேய்ப்பவர்களுக்கு கையில் சூடு எதுவும் தெரியக்கூடாது என்பதால் கையில் துணி ஒன்றினை பிடித்து கொள்வார்கள்.

இப்படி கல், இரும்பு பொருட்களை மார்பகம் மீதுவைத்து தேய்க்கும்போது, மார்பக வளர்ச்சியை தூண்டும் திசுக்கள் அழியும் என்றும், அதன்மூலம் மார்பக வளர்ச்சி வேகம் குறையும் என்று சொல்லப்படுகிறது.இப்படி வாரம் ஒருமுறை அல்லது 2 முறை செய்வார்கள். ஆனால் பிஞ்சு குழந்தைகளுக்கு வலி உயிர் போகும். சூடு பட்ட அந்த தழும்பு வாழ்நாளெல்லாம் உடம்பிலேயே இருக்கும்.

இந்த பழக்கம் இப்போது பிரிட்டனையும் தொத்திக் கொண்டது. பெண்கள் நல அமைப்புகள், உலக சுகாதார நிறுவனம், குழந்தைகள் நலனுக்காக செயல்படும் நிறைய அமைப்புகள் பிரிட்டனின் இந்த கொடுஞ்செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. அத்துடன் இது சம்பந்தமான விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளன.

ஆப்பிரிக்கா நாடுதான் எதிலும் முன்னேறாமல், இப்படி ஒரு பழமையில் ஊறி திளைத்துவிட்டார்கள் என்றால், நன்கு படித்த, உலகையே திரும்பி பார்க்க வைத்த, உலக நாடுகளையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரிட்டனுக்கு என்ன கேடு என்று அந்த நாட்டு அதிகாரிகளே வேதனை தெரிவிக்கிறார்கள்.

இதற்கு அந்நாடு சொல்லும் காரணம் என்னவென்றால், சீக்கிரத்திலேயே பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்துவிடுகிறார்கள். அதனால் அவர்களின் மார்பக வளர்ச்சி வேகமாக உள்ளது. காம கொடூரர்களின் கண்களில் இந்த சிறுமிகள் சிக்கிவிட்டால் பலாத்காரமே செய்துவிடுகிறார்கள். அதனால்தான் குறிப்பிட்ட வயது வரை, மார்பகங்களின் வளர்ச்சியை தடுக்க, இளம் பெண்களுக்கு இப்படி சூடு வைக்கிறார்கள் என்று விளக்கம் சொல்லகிறார்கள்.

இப்படி எல்லாம் செய்தால், மார்பக வளர்ச்சி வேண்டுமானால் தடைபடுமே தவிர, பிற்காலத்தில் தாய்பால் தருவது, மார்பக புற்று நோய் வருவது போன்றவை அப்பெண்களுக்கு வர நிறைய வாய்ப்புள்ளது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். இதுவரைக்கும் இது சம்பந்தமாக போலீஸ் புகார் கூட எதுவுமே தரப்பட யாருமே முன்வராததால், பிரிட்டனில் நிலைமை மோசமாகி கொண்டே இருக்கிறது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!