பிரபல மலையாள நடிகர் கவலைக்கிடம்… கை விரித்த டாகடர்கள்..!


மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் சீனிவாசன். இவர் ஏராளமான மலையாள படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்துள்ளார். மலையாள பட உலகில் சூப்பர்ஸ்டார்களாக உள்ள மோகன்லால், மம்முட்டி முதல் இளம் நடிகர்கள் வரை இணைந்து நடித்துள்ளார்.

தமிழில் ‘லேசா லேசா’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பு மட்டுமின்றி டைரக்‌ஷன் துறையிலும் வெற்றி கண்டவர். இவர் டைரக்ட் செய்த பல படங்கள் மக்கள் மத்தியில் இவருக்கு பெயரை பெற்றுத்தந்துள்ளது. இவர் தேசிய விருது மற்றும் மாநில அரசின் விருதுகளையும் பெற்றவர்.

தற்போது நடிகர் சீனிவாசன் தான் டைரக்ட் செய்த ஒரு மலையாள படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்தார். கொச்சி எடப்பள்ளியில் உள்ள ஸ்டூடியோவில் நேற்று காலை இந்த பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென சீனிவாசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனடியாக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நடிகர் சீனிவாசனை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு ஏற்பட்ட அதிக ரத்த அழுத்தம் காரணமாக நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். 4 டாக்டர்கள் கொண்ட குழுவினர் சீனிவாசனுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

தற்போது அவரது உடல் நிலை சற்று தேறி வருவதாகவும், 24 மணி நேர சிகிச்சைக்கு பிறகு தான் அவரது உடல்நிலை பற்றி கூறமுடியும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டும் நடிகர் சீனிவாசன் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சீனிவாசனுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் வினித் சீனிவாசன் தந்தை வழியில் மலையாள திரையுலகில் பிரபல நடிகராக உள்ளார். மேலும் ஏராளமான மலையாள படங்களில் பாடி உள்ளார். இளைய மகன் தயான். 2 மகன்களுக்கும் திருமணமாகி விட்டது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!