முகத்தை பளபளபாக்கவும் ,முகப்பருக்களை நீக்கவும் திராட்சையை பயன்படுத்துவது எப்படி..?


எல்லோரும் திராட்சையில் அடங்கியுள்ள ஆரோக்கிய குணங்கள் பற்றி அறிந்து இருக்க வேண்டும். திராட்சையில் உடலிற்கு தேவையான விற்றமின்கள் மற்றும் கனியுப்புகள் என்பவற்றை கொண்டு உள்ளது. இவை உடலின் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க உதவும்.

திராட்சை உணவு சமிபாட்டிற்கு உதவுவதுடன் எமது தோல் இளமையாக வைத்திருக்கவும் உதவும்.

திராட்சை முகபேக்கின் மூலம் எவ்வாறு அழகான தோலை பெற முடியும்??

• திராட்சையில் செறிந்துள்ள விற்றமின் ஏ ஆனது தோலின் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதோடு தோலின் நிறத்தையும் பேணுகின்றது.

• திராட்சையில் அடங்கியுள்ள விற்றமின் சி ஆனது கொலாஜன் புரதத்தின் உருவாக்கத்தை அதிகரிப்பதன் மூலம் தோலின் மீள்தன்மையை பேணுகின்றது.

• அத்துடன் விற்றமின் சி ஆனது சிறந்த அன்ரிஒக்ஸிடன் ஆக தொழிற்பாடுவதனால் முகத்தில் சுருக்கம், முக அமைப்பை பேணுதல் மற்றும் சூரிய ஒளியிலிருந்து தோலை பாதுகாக்கிறது.

• அதுமட்டுமின்றி இதில் அடங்கியுள்ள விற்றமின் சி ஆனது பாதிப்படைந்த தோலிற்கு சிகிச்சை அளிக்கவும் மற்றும் சூரிய கதிர்களினால் தோல் முதிர்ச்சி அடைதலில் இருந்து பாதுகாக்கிறது.

• வயது அதிகரிப்பால் தோலில் ஏற்படும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை சீர்செய்ய உதவும்.

எமது தோலை ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் மாற்ற திராட்சையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா ??


பளபளக்கும் தோலை பெறுவது எப்படி??

திராட்சையில் அடங்கியுள்ள விற்றமின்கள் தோலை இளமையாகவும் பிரகாசமாகவும் வைத்திருக்க உதவுகின்றன. அத்துடன் தோல் அழுத்தம் சோர்வு அடைதலை குறைப்பதோடு தோலை புத்துணர்ச்சி உடன் வைத்திருக்க உதவும்.
உங்களால் வீட்டிலேயே திராட்சை முகபேக்கினை எவ்வாறு தயாரிக்கலாம் என்று பார்ப்போமா???

உள்ளடக்கங்கள்
சிறிதளவு நசிக்கபட்ட திராட்சை மற்றும் 1 கப் தண்ணீர்.

எப்படி பயன்படுத்துவது??
தோல் நீக்கப்படாத நசிக்கபட்ட திராட்சையை பயன்படுத்தல். அதன் பின் சிறிதளவு நீரை சேர்த்து கலவையாக்கி கொள்ள வேண்டும். இதனை முகத்திற்கு பூசி 15 நிமிடங்கள் உலர விட வேண்டும். 15 நிமிடங்களின் பின்னர், முகத்தை குளிர் நீரினால் கழுவ வேண்டும்.

நீங்களே இப்போது உங்கள் முகத்தில் ஒரு வித்தியாசத்தை உணர்வீர்கள்.

பிரகாசமான தோலை பெறுவது எப்படி??
திராட்சையில் அடங்கியுள்ள அன்ரிஒக்ஸிடன் இயற்கையாவே தோலின் பிரகாசத்தை பேண உதவுகின்றன. மேலும் அதிலுள்ள ரனிக் அமிலம் தோலினை மென்மையாக பேண உதவும். இந்த முகப் பேக் வாரத்தில் ஒரு தடவை போடுதல் சிறந்த பலனை தரும்.

உள்ளடக்கங்கள்
திராட்சை கூழ் மற்றும் 1 தேக் கரண்டி தேன்

எப்படி பயன்படுத்துவது??
இதற்கு திராட்சை கூழ் வடிவில் பயன்படுத்தபடுகிறது. முதலில் சிறிதளவு நன்றாக அரைத்து கூழ் கலவையாக மாற்றி கொள்ள வேண்டும். அதன் பிறகு, 1 தேக்கரண்டி தேனை அதனுள் இட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின், இந்த தடிப்பான கலவையை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் உலர விட வேண்டும். அதற்கு பின் சற்றே வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.


திராட்சையை முகப்பருக்களை நீக்க பயன்படுத்துவது எப்படி??
திராட்சையில் அடங்கியுள்ள கூறுகள் முகத்தில் தோன்றும் கொழுப்பு பருக்கள் மற்றும் சூட்டுப் பருக்கள் என்பவற்றை குறைக்க உதவும். இத் திராட்சை பேக் ஆனது முகப்பரு அடையாளம் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க உதவும். இந்த முகப்பேகை வாரத்தில் இரண்டு தடவை பயன்படுத்துவது சிறந்த பலனை தரும்.
உள்ளடக்கங்கள்
1 தேக்கரண்டி திராட்சை கூழ்+ 1 தேக்கரண்டி தேன் + 1 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு

எப்படி பயன்படுத்துவது??
திராட்சை கூழ் ஐ எடுத்து அதனுள் 1 தேக்கரண்டி தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு என்பவற்றை சேர்க்க வேண்டும். இக் கலவையை முகத்தில் அடையாளம் உள்ள பகுதிகளில் பூசி 20 நிமிடங்கள் உலர விட வேண்டும். அதன் பின் குளிர் நீரை பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும்.

உலர்ந்த தோல் கொண்டவர்கள்
திராட்சையில் அடங்கியுள்ள நீரேற்றும் கூறுகள் தோலினை இயற்கையாக ஈரலிப்பாக பேண உதவும். இதனை தொடர்ச்சியாக பயன்படுத்துவதனால் மென்மையான ஈரலிப்பான மற்றும் ஆரோக்கியமான தோலை பெற முடியும்.

உள்ளடக்கங்கள்
நன்கு நசிக்கபட்ட திராட்சை+ 1 கரண்டி ஓட்ஸ்+ 1 கரண்டி தேன்+ 1 கரண்டி முட்டை வெள்ளைக் கரு

எப்படி பயன்படுத்துவது??
நன்கு நசிக்கபட்ட திராட்சையுடன் நன்கு பொடியாக்கி ஓட்ஸ்ஐ சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் அதனுள் 1 கரண்டி தேன், 1 கரண்டி முட்டை வெள்ளைக் கரு என்பவற்றையும் கலந்து கொள்ள வேண்டும். அதன் பின் இக் கலவையை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் உலர விட வேண்டும். பூசி 15 நிமிடங்கள் பின், குளிர் நீரினால் கழுவ வேண்டும்.

இதனை வாரத்தில் இரண்டு தடவை பயன்படுத்தினால் விரைவான சிறந்த பலனை தரும். .- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!