சூடுபிடித்த விஷாலின் தேர்தல் விவகாரம் – இருவருக்கும் உயிருக்கு ஆபத்தா? – விஷால் பகீர் பேட்டி..!!


வேட்பு மனுவில் தன்னை முன்மொழிந்த இருவரையும் காணவில்லை என நடிகர் விஷால் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

விஷாலின் வேட்புமனு நேற்று முன்தினம் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியால் நிராகரிக்கப்பட்டது. விஷாலை முன்மொழிந்த இருவரது கையெழுத்து போலி என்ற குற்றச்சாட்டு காரணமாக அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அந்நிலையில், திடீர் திருப்பமாக விஷாலை முன் மொழிந்து பின் மறுத்த 2 நபர்களும் இன்று மாலை 3 மணிக்குள் தேர்தல் அலுவலகத்திற்கு வந்து, தாங்கள் மிரட்டப்பட்டது குறித்து விளக்கம் அளித்தால் விஷாலின் மனு மறுபரீசிலனை செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


மனுவை வாபஸ் பெற இன்று மாலை 3 மணிதான் கெடு. எனவே, அதற்குள் அவர்கள் இருவரையும் விஷால் தரப்பு தேர்தல் அலுவலகத்திற்கு கொண்டு வர வேண்டும். இல்லையேல், இறுதி பட்டியல் இன்று மாலை வெளியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. விஷாலுக்கு மீண்டும் தேர்தல் அதிகாரி வாய்ப்பளித்துள்ளதால், இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள விஷால் “ 3 மணி வரைதான் எனக்கு நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மணி நேரம்தான் இருக்கிறது. ஆனால், எனது வேட்பு மனுவில் கையெழுத்திட்ட 2 பேரையும் காணவில்லை. அவர்கள் செல்போன் எண்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. என்னால், அவர்களின் உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது. நான் தேர்தலில் போட்டியிடுவதை அவர்களின் பாதுகாப்பே முக்கியம். எனவே, இதுபற்றி போலீசாரிடம் புகார் அளிக்கவுள்ளேன்” என அவர் தெரிவித்தார்.-Source: tamil.webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!