வீட்டிலேயே கால்களை ஸ்கிறப் செய்து சுத்தப்படுத்துவது எப்படி?


முகம், கைகளை எப்படி அழகாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறோமோ அதே போல் கால்களையும் பேணுவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

கால்களிற்கு விலை உயர்ந்த கிறீம்களை பயன்படுத்துவதோ அல்லது அழகு நிலையங்களிற்கு சென்று சிறப்பான சிகிச்சை எடுத்துக் கொள்வதோ பண விரயத்தை மட்டிமே ஏற்படுத்தும். ஆனால் நாம் அன்றாட வாழ்வில் செய்யும் சில செயல்களால் கால்களை இலகுவாக பராமரிக்க முடியும்.

இயற்கை தீர்வுகளை வீட்டில் இருந்தவாறு செய்வதனால் கால்களின் அழகு அதிகரிக்கச் செய்வதுடன், அதனை பக்டீரியா, பங்கஸ் தொற்றுக்களில் இருந்தும் பாதுகாக்கும்.

கால்களை பாதுகாக்கும் ஸ்கிறப் சில:
1. தேங்காய் எண்ணெய்யும் உப்பும்.
இந்த ஸ்கிறப் பாத வெடிப்பு உள்ளவர்களிற்கு மிகவும் பொருத்தமானது. தேங்காய் எண்ணெய் கால்கள் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளை இலகுவாக தீர்த்து விடுகிறது.
தேவையானவை:
• ¼ கப் தேங்காய் எண்ணெய்.
• 1 கப் உப்பு.
• சில துளி எண்ணெய்(ஏதேனும் ஒன்று)
பயன்படுத்தும் முறை:
மேற்குறிப்பிட்ட சேர்மானங்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஒரு ஜாடியில் சில நாட்களிற்கு வைக்கவும். அதனை கால்களில் 20 நிமிடங்கள் வரை ஸ்கிறப் செய்து 20 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனை வாரத்திற்கு ஒரு தடவை செய்வது சிறந்தது.
2. ஒலிவ் எண்ணெய்யும் பிறவுன் சுகர்.
தேவையானவை:
• 1 மேசைக்கரண்டி ஒலிவ் எண்ணெய்.
• 1 மேசைக்கரண்டி பிறவுண் சுகர்.
• 1 மேசைக்கரண்டி சமையல் சோடா
பயன்படுத்தும் முறை:
ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் கலந்து எடுத்துக் கொள்ளவும். அதனை கால்களிற்கு வட்ட வடிவில் ஸ்கிறப் செய்து 20 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.
3. சமையல் சோடா:
சமையல் சோடாவினால் ஸ்கிறப் செய்வதனால் வலிகளில் இருந்து நிவாரணத்தை தருவதுடன் சருமப் பிரச்சினைகளையும் தீர்த்து விடுகிறது.
தேவையானவை:
• 3 மேசைக்கரண்டி சமையல் சோடா.
• 1 மேசைக்கரண்டி நீர்.
பயன்படுத்தும் முறை:
சமையல் சோடாவை நீரில் கலந்து பசையாக தயாரித்துக் கொள்ளவும். அதனை கால்களில் தடவி மசாஜ் செய்து கொள்ளவும். 15 நிமிடங்களின் பின் குளிர்ந்த நீரினால் கழுவவும்.
4. பாலும் சீனியும்.
பாலில் உள்ள லக்டிக் அமிலம் உள்ளதனால் சருமத்திற்கு ஈரப்பதத்தையும் பிரகாசத்தையும் பெற்றுத் தரும். சீனி சருமத்தில் உள்ள இறந்த கலங்களை நீக்கும்.
தேவையான பொருட்கள்:
• 2 கப் பால்
• 2 கப் நீர்.
• 3 மேசைக்கரண்டி சீனி.

பயன்படுத்தும் முறை:
பாலையும் சீனியையும் நீருடன் கலந்து, அதனை கால்களிற்கு பயன்படுத்தி மசாஜ் செய்து கொள்ளவும். 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். சிறந்த தீர்விற்கு வாரத்திற்கு இரு தடவைகள் இதனை செய்வது சிறந்தது.
5. தயிரும் சீனியும்.
தயிர் சருமத்தில் உள்ள நிறத்திட்டுக்கள், இறாந்த கலங்களை நீக்குவதுடன், பக்டீரியாக்களை அழித்து விடும்.
தேவையானவை:
• ½ கப் தயிர்.
• 2 மேசைக் கரண்டி சீனி.
பயன்படுத்தும் முறை:
தயிருடன் சீனி கலந்து கால்களிற்கு ஸ்கிறப் செய்து சிறிது நேரத்தின் பின் நீரினால் கழுவவும்.
6. கோப்பியும் சீனியும்.
கோப்பியில் உள்ள காஃபின் சரும நிறத்தை மேம்படுத்த உதவும்.
தேவையான பொருட்கள்:
• ½ கப் கோப்பி பவுடர்.
• ½ கப் சீனி.
ஒரு மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய்/ ஒலிவ் எண்ணெய்.
பயன்படுத்தும் முறை:
கோப்பியையும் சீனியையும் கலந்து அதில் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளவும். அதனை கால்களில் வட்ட வடிவில் ஸ்கிறப் செய்து கொள்ளவும். 10 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!