மலை போல குவித்து வைக்கப்பட்ட பணம்… ஊழியர்களுக்குப் அதிரடி புத்தாண்டு போனஸ்..!


சீனாவில் பிப்ரவரி 5-ல் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஆரம்பித்துள்ளன. அவற்றில் ஒரு சீன நிறுவனம் ஊழியர்களுக்குத் தர வேண்டிய பணத்தை மலைபோல் குவித்து ஊழியர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

சீனாவின் ஜியாங்சி மாகாணம் நஞ்சாங் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை நிறுவனம் தனது ஊழியர்களுக்கான போனஸை ஒவ்வோராண்டும் வித்தியாசமான முறையில் வழங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறது. கடந்த ஆண்டு, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி போனஸ் வழங்கியது. இந்த ஆண்டு ஊழியர்களுக்கான போனஸ் பணம் 300 மில்லியன் யுவான் முழுவதையும் ரொக்கமாக மலைபோல் குவித்து காட்சிப்படுத்தியுள்ளது.

கிட்டதட்ட இந்திய ரூபாயில் ரூ. 315 கோடி ஆகும். இதை தனது 5 ஆயிரம் ஊழியர்களுக்குப் பிரித்தளிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி சராசரியாக ஒரு ஊழியருக்கு ரூ.62 லட்சம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண மலையைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்துபோன ஊழியர்கள், ‘இவ்வளவு பணத்தை எப்படி செலவழிப்பது என்று கூட தெரியவில்லை’ என்று கூறியுள்ளனர்.-Source: kamadenu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!