சொந்த இரத்தத்தாலேயே மேக்கப் போடும் பிரபல பாடகி..!


இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காமின் மனைவியும், பிரபல மாடல் அழகியுமான விக்டோரியா பெக்காம் (44 வயது) தன் ரத்தத்தினால் தயாரிக்கப்பட்ட கிரீமை தன் முகத்திற்கு பயன்படுத்துவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

லண்டனை சேர்ந்த மருத்துவர் பார்பரா ஸ்டர்ம், பிரபலங்களுக்கான ‘வேம்பையர் பேசியல்’ ( Vampire Facial) முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வித்தியாசமான முறையில் பேசியல் செய்து கொள்ள முடிவு செய்த விக்டோரியா, தன் ரத்தத்தினாலான பிரத்யேக கிரீமை அந்த மருத்துவரை வைத்து உருவாக்கி அதனை பயன்படுத்தி வருகிறார்.

வயதாவதால் ஏற்படும் மாற்றத்தை தடுப்பதற்காக அவரது சொந்த ரத்த அணுக்களை எடுத்து மிக பிரத்யேகமாக தயாரித்துள்ளார் அந்த மருத்துவர். 1200 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 97 ஆயிரம் ரூபாய்) மதிப்புள்ள கிரீமை முகத்திற்கு பயன்படுத்தும்போது, தன் முகம் மிகவும் பொலிவுடன் இருப்பதாகவும், இதனால் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பதாக விக்டோரியா பெக்காம் கூறியுள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!