கடனைத் திருப்பித் தராதவரை கொன்று டாய்லெட்டில் ஃப்ளஷ்அவுட் செய்த கொடூரம்..!


மும்பை விரார் பகுதியில், இடத்தில் கழிவு நீர்க் கால்வாய் அடைப்பை அகற்றியதில் பிணத்தின் சதை துண்டு துண்டாகக் கிடைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

58 வயதான கணேஷ் கொலாட்கர் என்பவரைக் காணவில்லை என்று அவரது குடும்பம் காவல்துறையில் புகார் அளித்திருந்தது. இந்த நேரத்தில் அவரின் நண்பர் பின்டு கிஷன் சர்மா என்பவர் வசிக்கும் பக்ராஜ் பாரடைஸ் குடியிருப்பின் கழிவு நீர்க் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, துப்புரவுத் தொழிலாளிகள் அடைப்பை அகற்றினர்.

அப்போது ஒரு மனித உடலின் சதை மட்டும் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்ததைப் பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீஸாருக்குத் தகவல் போனது. விரைந்து வந்த போலீஸார் பின்டுவைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் உண்மையைக் கக்கினார்.

பிணமாக கண்டுபிடிக்கப்பட்ட உடல் உறுப்புகளுக்குச் சொந்தக்காரர் கணேஷ். இவரும் பின்டுவும் நண்பர்கள். பின்டுவிடம் ரூ. 1 லட்சம் கடனாக வாங்கியிருந்தார் கணேஷ். ஆனால் திருப்பித் தரவில்லை. கேட்டு கேட்டுப் பார்த்து கோபமடைந்த பின்டு, வீட்டில் ஃபர்னிச்சரை நகர்த்த உதவிக்கு வேண்டும் என்று நைசாகப் பேசி அழைத்து, மதுபானம் ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்து கொலை செய்துள்ளார்.

உடலை துண்டு துண்டாக வெட்டி தமது வீட்டின் டாய்லெட்டில் போட்டு ஃப்ளஷ் செய்துள்ளார். எலும்புகளை ரயிலில் கொண்டு போய் வீசியுள்ளார். கணேஷ் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வந்தவர். பின்டு ஷேர் மார்க்கெட்டில் இருந்து வருபவர் என்று தெரிய வந்துள்ளது.

பின்டுவை போலீஸார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!