ஆற்றில் மிதந்த 2 சவூதி சகோதரிகளின் உடல்கள்.. அதிர வைத்த காரணம்..!


நியூயார்க்கில் ஹட்சன் ஆற்றின் கரையில் பிணமாகக் கிடந்த இரண்டு சவூதி அரேபிய சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டதாக தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் இந்த சம்பவம் நடந்தது. இது கொலையா, தற்கொலையா என்பதில் குழப்பம் இருந்து வந்தது. விசாரனை நடைப்பெற்று வந்த நிலையில் தற்கொலைதான் என்று பரிசோதனை செய்த மருத்துவர் உறுதி செய்துள்ளார்.

வர்ஜீனியாவிலுள்ள ஃபேர்ஃபாக்ஸ் கவுண்ட்டியில் வசித்து வந்த சகோதரிகள் ரோட்டானா (23) மற்றும் தலா ஃபாரியா (16) ஆகிய இருவரின் பூர்வீகம் சவூதி அரேபியா ஆகும். இவர்கள் இருவருடைய உடல்களும் கடந்த அக்டோபர் மாதம் ஹட்சன் ஆற்றில் மிதந்தன.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த உடல்களைக் கைப்ற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். சகோதரிகளின் மரணம் கொலையா, தற்கொலையா என்று விசாரனைக்கு உட்படுத்தப்பட்டது.

தற்போது பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், சகோதரிகள் இருவரும் தற்கொலைதான் செய்துகொண்டனர் என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த இருவரும், சட்ட விரோதமாக நியூயார்க்கில் தங்கி இருந்ததால் அவர்கள் போலீசாரால் தவறாக நடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டனர் என்று தகவல்கள் வெளியானது.

ஆனால் இதை காவல்துறை மறுத்தது. உண்மையில் அவர்களது குடும்ப உறுப்பினர்களால் இருவரும் தவறாக நடத்தப்பட்டுள்ளனர். இதனால் தங்களது உதவியை நாடியதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த விரக்தியில்தான் இருவரும் தற்கொலை முடிவை நாடியிருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 23 ம் தேதி இருவரும் மாயமானார்கள். அவர்கள் எங்கு போனார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் தற்கொலை செய்துகொள்ளும் நாள் வரை தங்களது வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. அதன் பின்னரே தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!