நீங்க யூஸ் பண்ணும் சம்போ தலைமுடிக்கு ஆரோக்கியமானதா..?


சம்போ முடியைப் பராமரிக்கும் பொருட்களில் ஒன்று. இது முடியின் தன்மைக்கு ஏற்றவாறு வேறுபட்ட முறையில் தயாரிக்கப்பட்டு சந்தையில் கிடைக்கின்றது. முடிக்கு மாஸ்க் போன்றவற்றை பயன்படுத்தி பாதுகாப்பதில் பலருக்கும் பொறுமை இருப்பதில்லை. விரைவானதும் இலகுவான முறையுமே எல்லோரும் விரும்புவார்கள். அதற்கான முதல் தெரிவே சம்போ.

சம்போவை இலகுவாக பயன்படுத்த முடியும். ஆனால் சம்போவால் போதியளவு பலன் கிடைக்கின்றதா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் உள்ளது. அந்த சந்தேகத்தை தீர்ப்பதற்கு சம்போவில் சில பொருட்களை சேர்த்து முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.

முதலில் நீங்கள் தெரிவு செய்யும் சம்போ சல்பேற், பரவீன் அற்றதாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த இரசாயணப் பொருட்கள் தலையில் அரிப்பையும், படை போன்ற தன்மையையும் ஏற்படுத்துகின்றது.

எனவே சம்போவில் உள்ள சேர்மானங்களை கவனித்து வாங்குவதில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

சம்போவில் சேர்த்து பயன்படுத்தக் கூடிய பொருட்கள் சில:

1. றோஸ் வாட்டர்.
தலையில் கடி அல்லது வேறு தொல்லைகள் ஏற்படும் போது ஒரு மூடி றோஸ் வாட்டரை சம்போவில் பயன்படுத்தி குலிப்பதனால் கடிகளை போக்குவதுடன், முடியை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.

2. எலுமிச்சைச் சாறு.
தலையை ஆழமாக சுத்தம் செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களில் நீங்கள் செய்ய வேண்டியது அரைத் தேக்கரண்டி எலுமிச்சைச் சாற்றை சம்போவில் கலந்து குலிப்பதே. இதனால் முடியின் ஆரோக்கியம் பேணப்படுவதுடன், pH அளவை சீராக பேணுகிறது.

3. தேன்.
சுத்தமான தேன் ஒரு தேக்கரண்டியை சம்போவுடன் சேர்த்துப் பயன்படுத்துவதனால் அது உலர்ந்த முடிய்இன் பிரச்சினையைத் தீர்ப்பதுடன், பக்டீரியாத் தொற்றுக்களை அழித்து, தலையை பளபளக்கச் செய்கின்றது. தேனை பயன்படுத்துவதனால் தலையை நன்றாக நீரில் கழுவ வேண்டும்.


4. லாவண்டர் எண்ணெய்.
லாவண்டர் எண்ணெய் சில துளிகளை சம்போவில் சேர்த்துக் குளிப்பதனால் பல நன்மைகள் கிடைக்கும். இது முடியின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. இது மன அழுத்தம், படபடப்பை போக்கி சிறந்த மனநிலையைத் தருகிறது. மேலும் நாள் முழுவதும் நறுமணத்தையும் தருகிறது.

5. கற்றாளைச் சாறு.
கற்றாளைச் சாற்றை முடிக்கு பயன்படுத்துவதனால் தலையின் எரிச்சல் உணர்வைப் போக்கி, அதனை ஈரப்பதத்துடன் பேண உதவும். இது பாதிப்படைந்த முடியை பராமரிப்பதற்கு உதவுவதுடன், முடியை நீண்டு வளரச் செய்கிறது.

6. நெல்லிக்காய் சாறு.
நெல்லிக்காய் முடிக்கு பலவிதத்தில் நன்மைகளைப் பெற்றுத் தருகிறது. இதனை ஒரு கரண்டி சம்போவில் கலந்து பயன்படுத்துவதனால் முடியின் கருமை நிறத்தை அதிகரிக்கச் செய்வதுடன், அதனை விரைவாக வளரவும் செய்கிறது.

7. தேயிலை மர எண்ணெய்.
தேயிலை மர எண்ணெய்யை சம்போவில் கலந்து பயன்படுத்துவதனால் பக்டீரியா பங்கஸ் தொற்றுக்களைக் குணப்படுத்துவதுடன் பொடுகை நீக்குவதற்கு உதவுகிறது. இதனை வாரத்திற்கு ஒரு தடவை பயன்படுத்துவது சிறந்தது.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!