உலக புகழ்பெற்ற நிர்வாண உணவகம் விரைவில் மூடப்படுகிறது – ஏன் தெரியுமா..?


பிரான்ஸ் நாட்ட்டில் பாரிஸில் உள்ள, உலக புகழ்பெற்ற ஒரே நிர்வாண விடுதி வரும் பிப்ரவரி மாதத்தோடு மூடப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது!

பாரிஸின் ஒரே நிர்வாண உணவக விடுதியாக O’naturel, 2016-ஆம் ஆண்டு மைக் மற்றும் ஸ்டீபென் சாடா எனப்படும் 43-வயது இரட்டையர்களால் துவங்கப்பட்டது. இந்த உணவகத்தை இவர்கள் திறந்தபோது, உணவகம் வரும் வாடிக்கையாளர்கள் நிர்வாண உலகில் தனித்துவமான அம்சங்களை உணரவேண்டும். காதல் மற்றும் நெருங்கிய உறவுகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களுக்கு தனிப்பட்ட நிர்வாண அனுபவத்தை பெறவேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு துவங்கினர்.

பிரபல ஆங்கில பத்திரிக்கையின் படி., O’naturel இயற்கையின் மதிப்புகளை உணர்ந்து, அதற்கான வசதிகளை உண்டாக்கி தருவதில் கவணம் செல்லுத்தும் ஒரு இடம் என புகழாரம் சூட்டப்பட்டது. மேலை நாடுகளில் வழக்கத்தில் இருக்கும் நிர்வாண கடற்கரைகளில் இருந்து இந்த O’naturel நிர்வாண உணவகம் சற்று வேறுபட்டது, ஏனெனில் கோடை காலத்தில் மட்டுமே நிர்வாண கடற்கரை செயல்படும், ஆனால் நிர்வாண உணவகம் முழுஆண்டும் செயல்படும்.

O’naturel தனது வாடிக்கையாளர்களின் சுதந்திரத்தை கருத்தில் கொண்டு செயல்படுவதால் தான் தற்போதும் இந்த உணவகத்திற்கு ஆதரவு நிலைத்து நிற்கிறது. உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விஷயங்களை பாதுகாக்க, உணவகத்திற்குள் கேமிராக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

வாடிக்கையாளர்களின் பாதுக்காப்பிற்காக அவரது உடமைகளை வைத்துக்கொள்ள லாக்கர் வசதி அளிக்கப்படுகிறது. மேலும் ஷூ அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்லிப்பர் வழங்குகிறது. இந்த உணவகத்தில் விந்தை என்னவென்றார், உணவகம் வரும் வாடிக்கையாளர்கள் மட்டுமே நிர்வாணமாக இருப்பர், உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் முறையான ஆடைகளை அணிந்து பணியாற்றுவர். இந்த விஷயங்களால் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த இந்த உணவகம், தற்போது மூடுவிழா காணவுள்ளது. உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர் குறைவு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.-Source: zee.news

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!