மூன்று மந்திரிகளின் செயலாளர்கள் அதிரடியாக கைது – ஸ்டிங் ஆபரே‌சனில் சிக்கி

உத்தர பிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் ஊழலற்ற ஆட்சி வழங்குவதில் உறுதியாக உள்ளார். மந்திரிகள் அனைவருக்கும் இது தொடர்பாக கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில் மந்திரிகளின் செயலாளர்கள், அதிகாரிகள் மீது லஞ்சப் புகார் கூறப்பட்டது. சமீபத்தில் உள்ளூர் தொலைக்காட்சி லக்னோ தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் ‘ஸ்டிங் ஆபரே‌ஷன்’ நடத்தியது. இதில் அரசுத்துறை அதிகாரிகள் சிக்கினார்கள். இந்த வீடியோ ஆதாரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இதையடுத்து இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க கூடுதல் டி.ஜி.பி. ராஜீவ் கிருஷ்ணன் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அமைத்தார். விசாரணை முடிவில் 3 செயலாளர்களும் கைது செய்ய்பபட்டனர். அதைத்தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மந்திரிகள் அர்ச்சனா பாண்டே, ஓம் பிரகாஷ் ராஜ்பர், சந்தீப்சிங் ஆகியோரின் செயலாளர்கள் ஆவார்கள். இதில் ஒரு செயலாளர் ரூ.40 லட்சம் வாங்கிய போதும் மற்ற இருவர் சட்டவிரோத சுரங்கம் தொடர்பாக பேரம் நடத்தியபோதும் பிடிபட்டனர். தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரே‌ஷனில் இந்த 3 செயலாளர்கள்தான் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.- Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.