சீரியசாக பேசும் தம்பித்துரை… கண்ணடித்து விளையாடும் ராகுல் காந்தி..!


பாராளுமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மிகவும் காரசாரமாக பேசிவிட்டு, பின்னர் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்தார். பின் தன் இருக்கைக்கு திரும்பியதும் அருகில் இருந்த எம்பியைப் பார்த்து கண்ணடித்தார். ராகுல் காந்தியின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் மீண்டும் பாராளுமன்றத்தில் ராகுல் கண்ணடித்த சம்பவம் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

நேற்று ரபேல் விவகாரம் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, ஜாலியாக கண்ணடித்துள்ளார் ராகுல். அ.தி.மு.க எம்.பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசிக்கொண்டு இருந்தபோது அவருக்கு பின் வரிசையில் அமர்ந்துகொண்டு மேஜையை தட்டி உற்சாகப்படுத்தினார். பின்னர், ராகுல் காந்தி கண்ணடித்து சிரித்தார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


ராகுல் காந்தியின் இந்த செயலை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. ராகுல் காந்தி கண்ணடிக்கும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், “ராகுல் மீண்டும் கண்ணடித்துள்ளார். இந்த முறை ரபேல் தொடர்பாக காரசாரமாக விவாதம் நடந்துகொண்டிருக்கும்போது கண்ணடித்துள்ளார். எனவே, அவருக்கு கண்டிப்பாக சிகிச்சை தேவை” என குறிப்பிட்டுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!