ஒடிசாவை மிரட்ட போகும் பபுக் புயல் – 7 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை..!


தென் சீன கடலில் உருவான, ‘பபுக்’ என்ற புயல், இன்று இந்தியாவின் வங்க கடல் பகுதிக்குள் நுழைய உள்ளது. இந்த புயல், அந்தமான் தீவுகளை தாண்டி, வடமேற்கில் நகர்ந்து, மத்திய வங்க கடலுக்குள் நுழையும். பின், வட கிழக்கு திசையில் நகர்ந்து, மியான்மர் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘பபுக்’ புயல் முன்னெச்சரிக்கையை தொடர்ந்து ஒடிசா மாநிலத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் ஜனவரி 5-ம் தேதி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘பபுக்’ புயல் ஜனவரி 6-ம் தேதி அந்தமான் தீவுகளை கடந்து செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்கு, வங்க கடலில் அலைகள் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால், மத்திய வங்க கடல் மற்றும் கிழக்கு பகுதிக்கும், அந்தமான் பகுதிக்கும், மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு பாலாசூர், பதார்க், ஜெகதிஷ்சிங்பூர், கேந்திரபாரா, பூரி, கஞ்சம் மற்றும் குத்ரடா ஆகிய 7 மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!