இளம் நடிகையின் காதல் வலையில் சிக்கிய ஆர்யா! விரைவில் திருமணமா…?


தமிழ் சினிமாவில் நிறைய நாயாகிகளுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்ட நடிகர் ஆர்யா, மீண்டும் பிரபல இளம் நடிகை ஒருவரின் காதலில் சிக்கி இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

நடிகர் ஆர்யா, அறிமுகமானதிலிருந்து அதிக காதல் கிசுகிசுக்களில் தொடர்ந்து சிக்கி வருகிறார். முக்கியமாக நயன்தாரா, அனுஷ்கா, அமலாபால், பூஜா என இவருடைய பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இந்நிலையில் திடீர் என, கடந்த வருடம் தான் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறி பிரபல தொலைக்காட்சியில் “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்கிற சுயம்வரம் சார்ந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள, 12 பெண்கள் போட்டி போட்டனர். இறுதியில் இலங்கை மற்றும் கேரளாவை சேர்ந்த மூன்று பெண்களை தேர்வு செய்தார் ஆர்யா.


ரசிகர்கள் அனைவரும் யாரை ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், மூன்று பெரும் தனக்கு பொருத்தமானவர்கள், ஆனால் இதில் ஒருவரை தேர்வு செய்து மற்ற இரு பெண்களை கஷ்டப்படுத்த நினைக்கவில்லை என கூறி பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தார்.

இதனால் பொதுமக்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் ஆர்யா அதிகமாக விமர்சிக்கப்பட்டார். பின் சில வாரங்கள் வெளியே தலைகாட்டாமல் வீட்டின் உள்ளேயே இருந்த இவர் தற்போது மீண்டும் படங்களில் நடிப்பது, பட விழாக்களில் கலந்து கொள்வது என பிஸியாக மாறி விட்டார்.

இந்நிலையில் ஆர்யாவுக்கும் இவருடன் ‘கஜினிகாந்த்’ படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை சயிஷாவும் காதலித்து வருவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. தற்போது சூர்யாவின் ‘காப்பான்’ படத்தில், சாயிஷா நாயகியாகவும் ஆர்யா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள் இந்த படத்தின் போது இவர்களுடைய காதல் மேலும் அதிகரித்துள்ளதாகவும், கூறப்படுகிறது. எனினும் இந்த முறையாவது ஆர்யாவின் காதல் திருமணத்தில் முடியுமா இல்லை, இதுவும் வந்த வேகத்தில் வதந்தியாக கடந்து போகுமா? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.-Source: asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!