மாவட்ட ஆட்சியரின் காலடியில் அழுது புலம்பிய விவசாயி..!


மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மின்மாற்றி பழுதானதால் தண்ணீர் இறைக்க முடியாமல் பயிர்கள் காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து இருந்தார். இது தொடர்பாக புகார் மனுவையும் கொண்டு வந்தார். அப்போது அவர் சென்ற நேரத்தில் அலுவலகத்தை விட்டு ஆட்சியர் வெளியே வந்தார். அப்போது ஆட்சியரை பார்த்த விவசாயி, பழுது அடைந்த மின்மாற்றியை விரைந்து பொருத்த அறிவுறுத்தக் கோரி அவரது காலில் விழுந்து தனது முறையீட்டை தெரிவித்தார்.

அதனை சற்றும் பொருட்படுத்தாத ஆட்சியர் விறுவிறுவென காரில் ஏறி அமர்ந்து கொண்டு காரின் கண்ணாடியை சற்று இறக்கிவிட்டு காரில் இருந்தபடியே பதில் கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

மாவட்ட ஆட்சியரின் காலடியில் விவசாயி அழுது புலம்பும் காட்சி இணையத்தளத்தில் பரவி வருகிறது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!