200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் – மரக்கிளை இடுக்குகளில் தொங்கி உயிரை விட்ட இளைஞர்..!


நாளை உலகம் முழுவதும் புத்தாண்டை கொண்டாட தயாராகி வருகின்றனர். முக்கிய சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கடும் குளிர் பனிமூட்டத்திலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.

இதனால் நகர் பகுதி மற்றும் மலைச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து 7 பேர் காரில் கொடைக்கானலுக்கு புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட காரில் வந்தனர்.

கொடைக்கானல்- பழனி மலைச்சாலையில் சவரிக்காடு அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடியது. பின்பு சாலை தடுப்பு சுவரை உடைத்து 200 பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் நிலைகுலைந்த வாலிபர்கள் ஆங்காங்கே தூக்கிவீசப்பட்டனர்.

மரக்கிளைகளின் இடுக்குகளில் தொங்கி ஒரு வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் பெயர் விபரம் தெரியவில்லை. தகவல் அறிந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் 3 வாலிபர்கள் படுகாயமடைந்து பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!