இணையத்தில் புயலை கிளப்பிய பாலிவுட் நாயகியின் பிகினி வீடியோ..!


“எம். எஸ. தோனி: சொல்லப்படாத கதை” என்ற படம் மூலம் பிரபலமானவர் திஷா பதானி. இவர் இந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் பாலிவுட் நடிகர் டைகர் ஷாராப்புடன் சேர்ந்து நடித்த “பாகி 2” படம் சூப்பர் ஹிட்டானது.

இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். படுகவர்ச்சியான சில படங்களை தைரியமாக சமூக ஊடங்களில் வெளியிட்டு வருகிறார். இதனால் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறார். ஆனாலும் எந்த விமர்சனத்தையும் கண்டுக்கொள்ளாமல், மீண்டும் மீண்டும் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்து வரும் “பாரத்” படத்தில் திஷா பதானி நடித்து வருகிறார். இவர் தமிழிலும் இயக்குனர் சுந்தர் சி படமான “சங்கமித்ரா” படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தற்போது Instagram பக்கத்தில் பிக்கினியில் ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது.-Source: zee.news

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!