வேனில் உதவி கேட்டு குழந்தையுடன் சென்ற 7மாத கர்ப்பிணி மரணம்… நடந்தது என்ன?


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வந்தவர் உதே கலாவதி(32). இவர் பழைய துணிகளை விற்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது.

7 மாத கர்ப்பிணியான இவர் கடந்த 2ஆம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். பேருந்தை தவறவிட்டதால் ஒரு வேனில் உதவி கேட்டு தனது குழந்தையுடன் பயணித்துள்ளார்.

வண்டியில் சென்று கொண்டிருந்தபோது வேனில் இருந்த டிரைவர் மற்றும் கிளினர் இருவரும் சேர்ந்து கலாவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க கலாவதி ஓடும் வேனில் இருந்து குதித்துள்ளார். சம்பவ இடத்திற்கு கலாவதி உயிரிழந்தார். இதையடுத்து அவர்கள் குழந்தையை இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது காவல்துறையினர் வேன் டிரைவர் மற்றும் கிளினர் ஆகியோரை தேடி வருகின்றனர். – Source: webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!