கொலையாளிகளை சுட்டுக்கொல்லுங்கள் என பேசி சர்ச்சையில் சிக்கிய குமாரசாமி..!


கர்நாடக மாநிலம் மந்த்யா மாவட்டத்தைச்சேர்ந்த பிரகாஷ் என்பர் நேற்று பிற்பகல் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட பிரகாஷ், கர்நாடகாவில் ஆளும் ஜேடிஎஸ் கட்சியைச்சேர்ந்தவர் ஆவார். ஆளும் கட்சியைச்சேர்ந்த பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டது, மந்த்யா மாவட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்தக்கொலை செய்தி அறிந்ததும், காவல்துறை அதிகாரி ஒருவரிடம் செல்போன் மூலமாக பேசிய கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, “ அவரை ( கொலை செய்யப்பட்ட ஜேடிஎஸ் பிரமுகர் பிரகாஷ்) எனக்கு நன்றாக தெரியும். நல்ல மனிதர் அவர், அவரை ஏன் கொலை செய்தனர் என எனக்கு தெரியவில்லை. கொலையாளிகளை கருணையின்றி சுட்டுக்கொன்று விடுங்கள், ஒரு பிரச்சினையும் இல்லை” இவ்வாறு அவர் பேசினார். முதல் மந்திரியான குமாரசாமி இவ்வாறு பேசிய காட்சிகள் உள்ளூர் செய்தியாளர் ஒருவரால் படம் பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரவியது.

#WATCH Karnataka CM HD Kumaraswamy caught on cam telling someone on the phone ‘He(murdered JDS leader Prakash) was a good man, I don’t know why did they murder him. Kill them (assailants) mercilessly in a shootout, no problem. (24.12.18) pic.twitter.com/j42dqiRs0a

— ANI (@ANI) December 25, 2018
இந்த நிலையில், தான் பேசியது குறித்து விளக்கம் அளித்த குமாரசாமி, ” நான் அவ்வாறு உத்தரவிடவில்லை, உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு பேசிவிட்டேன். இரண்டு கொலைகளுக்கு காரணமான குற்றவாளிகள், ஜாமினில் வெளி வந்தமூன்றாவது நாளில் மற்றொரு நபரை கொன்றுள்ளனர். ஜாமினை எவ்வாறு முறைகேடாக அவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதை இந்தச்செயல் காட்டுகிறது” என்றார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!