மலை விளிம்பில் பள்ளத்தில் தொங்கியபடி நின்ற பேருந்து – கதறி அழுத பயணிகள்..!


ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தின் பேடர் பகுதியில் இருந்து ஜம்மு நகரை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 30 பயணிகள் இருந்தனர்.

இந்த நிலையில், அந்த பேருந்து தோடா மாவட்டத்தில் பதோட்-கிஷ்த்வார் நெடுஞ்சாலையில் கட்சு கிராமம் வழியே சென்றபொழுது சாலையில் பனி படர்ந்து இருந்துள்ளது.

இதனால் ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இதனை தொடர்ந்து பேருந்து மலை விளிம்பில் சென்று தொங்கியபடி பள்ளத்தில் விழும் நிலையில் நின்றுள்ளது. பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். அவர்கள் உதவி கேட்டு அலறியபடி இருந்தனர். இதனை கவனித்த அருகிலுள்ளவர்கள் உடனடியாக அங்கு சென்று பேருந்தில் இருந்தவர்களை மீட்டனர்.

குளிர்காலங்களில் சாலைகளில் பனி படர்ந்து இருக்கும் என ஓட்டுநர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இதனால் சாலையில் வாகனம் செல்லும்பொழுது கவிழும் ஆபத்து உள்ளது என்றும் கவனமுடன் செல்லும்படியும் அவர்கள் எச்சரித்து உள்ளனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!