இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சுனாமி:பலி எண்ணிக்கை 168 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா பகுதிகளில் சுற்றுலாவுக்கான பீச்சுகள் மற்றும் கடலோர பகுதிகள் உள்ளன. இந்த நிலையில் இங்கு திடீரென சுனாமி அலைகள் கடுமையாக தாக்கின. இதில் 168 பேர் பலியாகி உள்ளனர். 745 பேர் காயமடைந்து உள்ளனர். 30 பேரை காணவில்லை.

இதில், ஜாவாவின் மேற்கு முனை பகுதியில் 33 பேர் பலியாகி உள்ளனர். செராங்கின் வடக்கே 3 பேரும், தெற்கு லாம்பங்கில் 7 பேரும் பலியாகி உள்ளனர். இந்த பலி எண்ணிக்கை உயர கூடும் என கூறப்படுகிறது.

இந்த சுனாமியால் 430க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்து உள்ளன. 9 ஓட்டல்கள் மற்றும் 10 கப்பல்களும் சேதமடைந்து உள்ளன. பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. அனாக் கிரகட்டோவா என்ற எரிமலை சீற்றத்தினால் இந்த சுனாமி அலைகள் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்று தகவல் தெரிவிக்கின்றது.

அனாக் கிரகட்டோவா எரிமலையானது கடந்த சில நாட்களாக புகைந்து கொண்டே இருந்தது. இதில் இருந்து பல ஆயிரம் மீட்டர்கள் உயரத்திற்கு வானை நோக்கி சாம்பல் புகையானது பரவி வந்தது. – Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.