பிளீஸ் ‘ஒன்ஸ் மோர்’.. கன்னம் சிவந்த பிரியங்கா.. முத்தத்தால் உருகிய நிக்!


திருமண வரவேற்பு விழாவில் கணவர் ஆசையை நிறைவேற்றி, கன்னத்தில் முத்தமிட்டு காதலை பரிமாறிக்கொண்ட நிக் – பிரியங்கா தம்பதியினர்.

நிக் ஜோன்ஸ் – பிரியங்கா தம்பதிக்கு கடந்த 1ஆம் தேதி திருமணம் நடந்தது. இதைத்தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த தம்பதி தங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

கடந்த 4ஆம் தேதி டெல்லியில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டதை தொடர்ந்து, மும்பை நகரில் நேற்று வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

இதில், நிக் விரும்பிக் கேட்க, பிரியங்கா விருப்பத்தோடு நிக் கன்னத்தில் முத்தம் ஒன்றை இட்டார். இதைப் பார்த்த விருந்தினர்களும், பத்திரிக்கை நண்பர்களும் நிக்-பிரி தம்பதியின் அந்யோன்யத்தைக் கண்டு உருகிப்போனார்கள்.

உற்சாக மிகுதியால் கூட்டத்தில் இருந்த ஒருவர் ‘ஒன்ஸ் மோர்’ என்று கத்தவும், மொத்த கூட்டமும் உடன் சேர்ந்து கொண்டது. இச்சபவத்தால் வெட்கத்தின் மிகுதியில் நெகிழ்ந்து பிரியங்கா சோப்ராவுக்கு கன்னம் சிவந்துபோனது.

இந்நிகழ்சியில், பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன், ரன்வீர் சிங், சல்மான் கான், கங்கனா ரானாவட், கத்ரீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.-Source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!