பெரம்பலூரில் தனியார் பள்ளி விடுதியில் நடப்பது என்ன? 40 மாணவர்கள் மரணம்…!


கடலூர் மாவட்டம் நெய்வேலி கேபிள் தெருவை சேர்ந்தவர் ராமநாதன். இவருடைய மகன் ராம்குமார். இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ்1 படித்து வந்தார்.

கடந்த 22ந் தேதி ராம்குமார் பள்ளி விடுதியில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ராம்குமாரின் பெற்றோர் தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்கள்.

இதையடுத்து ராம்குமாரின் உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு மாணவரின் உடலை பிரேத பரிசோதனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்ய மூன்று நிபந்தனைகளை விதித்தனர்.


பிரேத பரிசோதனையை மருத்துவக்குழுவினர் தான் மேற்கொள்ள வேண்டும். அந்த மருத்துவக்குழுவுடன் எங்கள் தரப்பிலான மருத்துவர் ஒருவர் உடன் இருக்க வேண்டும்.

பிரேத பரிசோதனையை வீடியோவில் முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ஆனால் பிரேத பரிசோதனை செய்ய உள்ள மருத்துவக்குழுவுடன் அவர்கள் தரப்பிலான மருத்துவர் ஒருவர் உடன் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் ஏற்க முடியாது என்று திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ராம்குமாரின் உடலை வாங்க மறுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பள்ளியின் கணித ஆசிரியர் குன்னத்தை சேர்ந்த ஆசைத்தம்பி (வயது 32), மாணவர் ராம்குமார் விசில் அடித்ததால் பல மாணவர்கள் முன்னிலையில் பிரம்பால் அடித்து, கண்டித்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து ஆசிரியர் ஆசைத்தம்பியை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். ஆனால் இந்த கைதின் பின்னணியில் பல மர்மம் நீடிக்கிறது.

இந்த விடுதியில் இந்த ஆண்டில் நிகழும் நான்காவது மர்ம மரணம் என்றும், இதுவரையில் நாற்பதுக்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு வந்த பெரம்பலூர்வாசிகள் கூறுகின்றனர்.

இதற்கு ஓர் உண்மை கண்டறியும் குழு விசாரணை அவசியம் என்று எண்ணுகிறேன். என்று திருச்சி குடிமக்கள் உரிமைகள் பொதுமன்றம் வழக்கறிஞர் / ஒருங்கிணைப்பாளரான கமருதீன் கூறியுள்ளார். – Source: seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!