பெற்ற தாயிடம் இப்படியொரு கேள்வியை கேட்கலாமா சாய்பல்லவி..!


பிரேமம் படத்தின் மூலம் அனைத்து இளைஞர்கள் மனதிலும் மலராக பதிந்தவர் நடிகை சாய்பல்லவி.

இவர் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு என பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது மாரி2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங்கின் போது காட்சி முடிந்தும் சாய்பல்லவி அழுது கொண்டேயிருந்தார் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனுஷ் கூறினார்.

இதுபற்றி கூறுகையில், நான் சில படங்களை பார்க்கும்போது எமோஷ்னலாகிவிடுவேன். கன்னத்தில் முத்தமிட்டால் படம் பார்க்கும் போது நான் சத்தமாக அழுதுவிட்டேன்.

என் அம்மா வெளியே இழுத்துவந்துவிட்டார். என்னையும் தத்தெடுத்திங்களா என்று அழுதுகொண்டே கேட்டேன். என் அம்மா ரெண்டு பேரும் முகம் ஒன்னாதான் இருக்குபாரு என்று கூறி சமாதானப்படுத்தினார்.

அதுபோலத்தான் இந்த காட்சியில் நடிக்கும்போதும் நான் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்.-Source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!