ஓட்டத்துக்கு உசேன் போல்ட்; ஆட்டத்துக்கு நம்ம ஓவியா..!

விஷ்ணு விஷால் தயாரித்து, ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா காஸண்ட்ரா நடித்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்க, செல்லா அய்யாவு இயக்கியுள்ளார்.

சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஓவியாவின் கேரக்டர் பெயர் குறித்த தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஆக்‌ஷன் கலந்த காமெடி திரைப்படமான இதில் யோகி பாபி, கருணாகரன், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வரும் 21ம் தேதி படம் வெளியாகிறது.

கேமியோ ரோலில் ஓவியா

படத்தில் கேமியோ கேரக்டரில் ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை ஓவியா நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரது கதாபாத்திரம் குறித்த தகவலை படக்குழுவினர் சிறிய வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

அதன்படி கனகா என்ற கேரக்டரில் ஓவியா தோன்றுகிறார். மேலும், வீடியோவில் ‘ஓட்டத்துக்கு உசேன் போல்ட்; ஆட்டத்துக்கு நம்ம ஓவியா’ என குறிப்பிட்டு உலகின் வேகமான ஓட்டக்காரருடன் ஒப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஓவியாவின் அசத்தலான குத்தாட்டம் இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய காத்திருக்கிறது.Source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!