மனைவி 2 குழந்தைகளை கொன்றுவிட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை..!


சென்னை துரைப்பாக்கத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துரைப்பாக்கம் எழில் நகரை சேர்ந்தவர் பாபு(30) ஆட்டோ ஓட்டுநர் ஆவார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விமலா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கிஷோர்(6) என்ற மகனும், தியா(4) என்ற மகளும் இருந்தனர். பாபுவுக்கு குடிபழக்கம் இருந்ததால் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 14ம் தேதி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த விமலா கணவரிடம் கோபித்துகொண்டு குழந்தைகளுடன் திருக்கழுக்குன்றத்தில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்றுவிடார். இதையடுத்து 16-ம் தேதி பாபு மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை வரை பாபு வீட்டில் இருந்து யாரும் வெளியில் வரவில்லை. அக்கம் பக்கத்தினர் பாபு வீட்டு கதவை தட்டிபார்த்துள்ளனர். உடனே கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனே போலீசார் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். பாபு மற்றும் விமலா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். குழந்தைகள் இருவரும் கழுத்து நெறிக்கப்பட்டு படுக்கையில் கிடந்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் 4 பேரின் உடலையும் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அவர் போதையில் இந்த செயலில் ஈடுபட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்று போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.-Source: asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!