போலீஸ் சூப்பிரண்டு கயல் விழியிடம் உடுமலை கவுசல்யா பரபரப்பு புகார்..!


உடுமலை கவுசல்யா இன்று திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு கயல் விழியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நாங்கள் சங்கர் சமூக நீதி அறக்கட்டளை நடத்தி வருகிறோம். அறக்கட்டளைக்கு சந்தோஷ்ஸ்ரீ என்ற பெண் நேற்று வந்தார். கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி பாதுகாப்பு கேட்டு அறக்கட்டளையில் தங்க அனுமதி கேட்டார். அவருக்கு நாங்கள் அனுமதி வழங்கி பாதுகாப்பு அளித்தோம்.

இரவு 9.30 மணிக்கு 2 போலீசார் அறக்கட்டளைக்கு வந்து எங்கள் பாதுகாப்பில் இருந்த பெண்ணை தரதரவென இழுத்துச்சென்றனர்.

இதை தடுக்க முயன்ற சங்கரின் தம்பியை போலீசார் தாக்கினர். சட்டத்திற்கு புறம்பாக நடந்த 2 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.-Source:

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!