ஆண்மை தன்மையை அதிகரிக்க செய்யும் வெந்தய கீரை..!


வெந்தய இலைகள் நம் உடலுக்கு எந்த அளவிற்கு நல்லதுசெய்கின்றன என்பதை பார்க்கலாம்.

இந்த இலைகளை பரோட்டா முதல் சப்ஜி வரை உணவு டிஷ்களில் பயன்படுத்துகின்றோம். வெந்தய இலைகளை நாம் எடுத்துக்கொள்வதால், செரிமானம் மிக சிறப்பாக இருக்கும்.

இதில் உள்ள நார்ச்சத்து, புரோட்டின் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வைக்கிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த தேவையான இன்சுலின் அளவை சீராக சுரக்க உதவி செய்கிறது.

உடலில் உள்ள தேவை இல்லாத கொழுப்பை வெளியேற்றுகிறது. கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி, நல்ல கொலஸ்ட்ராலை வைத்துக்கொள்கிறது. தாய்ப்பால் சுரப்பிற்கும் வெந்தய கீரை மிகவும் நல்லது. வெந்தய கீரையை தொடர்ந்து உண்டு வந்தால், மலசிக்கல் வாயு தொல்லை, வயிற்றுப்புண் உள்ளிட்ட எந்த பிரச்னையாக இருந்தாலும் மிக விரைவாக நன்றாகி விடும்.

நம் உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். இதே போன்று, ஆண்களின் ஆண்மை தன்மையை அதிகரிக்க செய்கிறது வெந்தய கீரை. வெந்தய கீரையை தொடர்ந்து எடுத்துக்கொள்வதால், அவர்களுக்கு இதயநோய் வராமல் தடுக்க முடியும்.-Source: asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!