4400 ஆண்டுகள் பழைமையான கல்லறை கண்டுபிடிப்பு – எங்கு தெரியுமா..?


எகிப்து நாட்டின் பாலைவனப் பகுதிகளில் பிரமிட்கள் மற்றும் பிரேதங்களை பதப்படுத்தி வைத்திருக்கும் மம்மி எனப்படும் கல்லறைகள் பரவலாக காணப்படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தங்களது முன்னோர்களின் நினைவாக இந்த கல்லறைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகரான கெய்ரோ அருகே உள்ள சக்காரா பிரமிட் அருகே சுமார் 4400 ஆண்டுகள் பழைமையான ஒரு மதத்தலைவரின் கல்லறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.


இந்த கல்லறையில் வண்ணமயமான எழுத்தோவியங்கள், பண்டைகாலத்து அரசர்களின் உருவங்கள், இறந்த மதத்தைலைவர் மற்றும் அவரது குடும்பத்தாரை அடையாளப்படுத்தும் ஓவியங்கள் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்து இப்பகுதியில் அகழ்வு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!