மொட்டை மாடியில் 7 வயது சிறுமியை சீரழித்த முதியவர்..!


திருப்பூர் வீரபாண்டி சுப்பாண்டா பாளையத்தை சேர்ந்தவர் ஹனிபா (62). இவர் அப்பகுதியை சேர்ந்த 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமியை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அச்சிறுமி வேலைக்கு சென்று திரும்பிய தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் வீரபாண்டி போலீசில் புகார் செய்தனர்.

இதனை தொடர்ந்து ஹனிபாவை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!