திரிஷாவின் ‘சரோ’ ரகசியத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பேட்ட’. பக்கா கமர்ஷியலாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், நவாசுதின் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வரும் பொங்கலுக்கு ‘பேட்ட’ படம் வெளிவருகிறது. இதில் இடம்பெற்றுள்ள ‘மரண மாஸ்’, ‘உல்லாலா உல்லாலா’ பாடல்கள் வெளியாகி, அனைவரையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஜினி படத்திற்கு முதல் முறையாக அனிருத் இசையமைத்துள்ளார்.

‘மரண மாஸ்’ பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர். பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் மிகவும் சிறப்பான எழுதப்பட்டுள்ளது. சென்னைத் தமிழில் செம குத்துப் பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.


இது ரஜினி ரசிகர்களையும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது. இந்நிலையில் ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் குறித்து, சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. அதாவது ‘ஜித்து’ என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதுகுறித்த போஸ்டரில் கையில் துப்பாக்கி உடன், வெறித்தனமாக காட்சி அளிக்கிறார்.

இதேபோல் நவாசுதின் சித்திக் கதாபாத்திரம் குறித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. அதாவது ‘சிங்கார் சிங்’ என்ற கேரக்டரில் நடிக்கிறார். இந்த சூழலில் நடிகை திரிஷாவின் கதாபாத்திரம் குறித்து சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதாவது ‘சரோ’ என்ற கேரக்டரில் திரிஷா நடிக்கிறார். இதுதொடர்பான போஸ்டரில் ரஜினியும், திரிஷாவும் ஒன்றாக காட்சியளிக்கின்றனர். இவர்களின் அழகை வார்த்தைகளால் சொல்லிமாளாது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.-source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!