நாளை வீதி வீதியாக தினகரன் தேர்தல் பிரசாரம்…!


ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவர் கடந்த 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவர் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்கள் அடங்கிய கொடியை பயன்படுத்தி வருகிறார். வேட்புமனு தாக்கலின் போது அவரது ஆதரவாளர்கள் அந்த கொடியுடனேயே வந்தனர். தொப்பி சின்னத்தை கேட்டு பெறும் முயற்சியிலும் தினகரன் ஈடுபட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலையொட்டி தினகரன் அணி ஆலோசனைக் கூட்டம் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

அவரது அணியின் மாவட்ட செயலாளர் வெற்றி வேல் தலைமை தாங்கினார். இதில் நாஞ்சில்சம்பத், தங்க தமிழ்ச்செல்வன், சி.ஆர்.சரஸ்வதி, புகழேந்தி, பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்த கூட்டத்தில் தினகரன் பங்கேற்கவில்லை. கூட்டம் நடந்தபோது அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றிருந்தார்.

இந்த நிலையில் ஆர்.கே. நகர் தொகுதியில் தினகரன் நாளை முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். அவர் வீதி வீதியாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். வீடு வீடாக சென்றும் ஓட்டு கேட்கிறார்.

பிரசாரத்தின் போது தினகரன் கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடியையே பயன்படுத்துகிறார். இதற்காக 1,500 கொடிகள் ஆர்டர் செய்யப்பட்டு தயார் நிலை யில் உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் அதிக கூட்டங்களை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக பொதுமக்களை அதிகஅளவில் அழைத்து வரவும் அவர் தனது ஆதரவு நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!