சட்டசபை தேர்தலில் 977 வேட்பாளர்கள் – இதில் 137பேர் கிரிமினல்கள்…!


குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதில் 977 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் ஜனநாயக மறுசீரமைப்பு சங்கத்தினர் இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தினர்.

அதில் தேர்தலில் போட்டியிடும் 137 வேட்பாளர்கள் கிரிமினல்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் கொலை, ஆள் கடத்தல் மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட கடுமையான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள்.

இவர்களில் பா.ஜனதா சார்பில் 10 பேரும், காங்கிரஸ் சார்பில் 20 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 8 பேரும் போட்டியிடுகின்றனர். தேசியவாத காங்கிரஸ் சார்பில் 3 பேரும், ஆம்ஆத்மி கட்சி சார்பில் ஒருவரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!