எல்லா விதமான தலைமுடிகளின் பிரச்சினைகளிற்கும் ஒரே தீர்வு தேங்காய் எண்ணெய்…!


நம் முன்னோர் காலத்தில் இருந்து பயன்படுத்தும் ஒரே எண்ணெய் தேங்காய் எண்ணெய். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடியின் வேர் வரை உட்சென்று முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். இது பலவிதமான முடி பிரச்சினைகளை இலகுவாக தீர்த்து விடும்.

1. முடி உதிர்விற்கு:
முடி உதிர்வது எனபது சாதாரணமானதே, ஆனால் தினமும் அளவுக்கதிகமாக முடி உதிர ஆரம்பித்தால் அதற்க்உ தீர்வைக் காண வேண்டியது அவசியம். இதற்க்,உ வேப்பிலையை தேங்காய் எண்ணெய்யில் போட்டு அடுப்பில் வைத்து சூடாக்கவும். இலை மண்ணிறமாக மாற ஆரம்பித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். இதன் போது இலையில் உள்ள சாறு முழுவதும் எண்ணெய்யுடன் கலந்து விடும். இதனை இரவில் தலையில் தடவி மசாஜ் செய்து மறுநாள் காலையில் குளிக்கவும்.

வேப்பிலை பக்டீரியா மற்றும் பங்கள் தொற்றுக்களை அழிப்பதுடன் முடியின் வேர்களிற்கு ஊட்டச்சத்தை வழங்கி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும். இதனை வாரத்திற்கு ஒரு தடவை செய்வது சிறப்பானது.

2. பொடுகுத் தொல்லைக்கு:
பொடுகு என்பது வேரின் ஆழத்தில் உள்ள பிரச்சினை இதனை தீர்ப்பதற்கு சில துளி தேயிலை மர எண்ணெய், எலுமிச்சைச் சாற்றை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து வாரத்திற்கு 2 அல்லது 3 தடவைகள் பயன்படுத்த வேண்டும்.

தேயிலை மர எண்ணெய் பக்டீரியாத் தொற்றுக்கள் மற்றும் பொடுகினால் ஏற்படும் கடிகளில் இருந்து தீர்வைத் தருகிறது. எலுமிச்சைச் சாறு சீபம் உருவாக்கத்தையும், pH அளவையும் சீராக்கும்.


3. முடியின் நுனிப்பகுதியின் வெடிப்பிற்கு:
முடியின் நுனிப்பகுதி வெடித்து பாதிப்படைந்ததும் முதலில் நீங்கள் முடியை வெட்டுகிறீர்கள். அது சரியாக இருந்தாலும் மேலும் முடி பாதிப்படையாமல் இருப்பதற்கு இதனை முயற்சியுங்கள்.

1 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய்யில் 2 முட்டையைச் சேர்த்து பயன்படுத்துங்கள். இதனை நன்றாகக் கலந்து தலையில் தடவி 1 மணி நேரம் சவர் கப்பினால் மூடவும். பின்பு சம்போ பயனபடுத்திக் குளிக்கவும். முட்டையில் உள்ள புரோட்டின் வேரின் நுனி வரை சென்று முடிக்குத் தேவையான ஊட்டச்சத்தினை வழங்கும்.

4. முடி வளர்ச்சிக்கு:
தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்தால் முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். இதற்கு சூடாக்கிய தேங்காய் எண்ணெய்யால் மசாஜ் செய்து வருவது சிறந்தது. இதனால் மன அழுத்தம் குறைந்து ஆறுதல் படுத்தும். இதனாலும் முடி உதிர்வு குறைவடைந்து வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

5. தலையில் பருக்களை நீக்கும்.
முகத்தில் பருக்கள் ஏற்படுவது போல தலையிலும் பருக்கள் தோன்றும். இதற்கு தேயிலை மர எண்ணெய்யை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து மசாஜ் செய்து 1 மணி நேரத்தின் பின் சம்போ பயன்படுத்தி கழுவவும்.

6. கண்டிஸ்னர்.
தேங்காய் எண்ணெய் முடியின் வேர் வரை சென்று ஊட்டச்சத்தை வழங்கும். தேங்காய் எண்ணெய்யையும் தேனையும் கலந்து முடிக்கு பயன்படுத்துவதனால் உலர்ந்த முடிக்கு ஊட்டச்சத்தும், ஈரப்பதமும் கிடைக்கும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!