அடுக்குமாடி கட்டிடத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ… 10 பேர் உடல் கருகி பலி..!!


சீனாவின் வடக்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள நகரம் தியான்ஜென். துறைமுக நகரான இதன் மையப்பகுதியில் உயரமான அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. பல மாடிகளை கொண்ட இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் தற்போது சீரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஊழியர்கள் நேற்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 38–வது மாடியில் திடீரென தீ பிடித்தது. கொழுந்துவிட்டு எரிந்த தீ மளமளவென அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவியது.


தகவலறிந்த தீயணைப்பு படைவீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்க போராடினர். இந்த தீ விபத்தில் சிக்கி உடல் கருகி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் தீக்காயம் அடைந்தனர். இதையடுத்து, மீட்பு படையினர் காயம் அடைந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

முதல் கட்ட விசாரணையில், உள் அலங்காரப் பொருட்களில் தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டில் தியான்ஜென் நகரில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்ட வெடிபொருள்கள் வெடித்ததில் 173 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!