சுவீடன் நாட்டில் கட்டிடத்தின் மீது மோதிய விமானம் – மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்..!!


சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோம் நகரில் இருந்து டெல்லிக்கு இன்று அதிகாலை ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 179 பயணிகள் மற்றும் 6 விமான பணிப்பெண்கள் இருந்தனர்.

விமானம் 5-வது டெர்மினலில் இருந்து ஓடுபாதைக்கு செல்வதற்காக புறப்பட்டது. பிறகு அந்த விமானத்தை சற்று வேகமாக விமானி இயக்கினார்.

அப்போது விமானம் சற்று விலகி ஓட ஆரம்பித்தது. அருகில் இருந்த கட்டிடத்தில் விமானத்தின் இடது பக்க இறக்கை மோதியது. இதனால் விமானம் குலுங்கியது.

அதிர்ஷ்டவசமாக விமானி அந்த விமானத்தை உடனடியாக நிறுத்தி விட்டார். இதனால் விமானத்தில் இருந்து 179 பயணிகளும் உயிர் தப்பினார்கள்.

விமானம் சற்று தடம் மாறி சென்றதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. உடனடியாக அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர வாசல் வழியாக வெளியேற்றப்பட்டனர்.

பிறகு பயணிகள் அனைவரும் ஸ்டாக்டோம் விமான நிலையத்தில் அமர வைக்கப்பட்டனர். அந்த விமானத்தை சுற்றி தீயணைப்பு வண்டிகள் நிறுத்தப்பட்டன.

விமானம் கட்டிடத்தில் மோதியதற்கு காரணம் என்ன என்பது பற்றி சுவீடன் நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சில மணி நேரத்திற்கு பிறகு டெல்லி பயணிகள் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.